<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

10.6.04

நோயற்ற வாழ்வு..4 

ஆஸ்த்துமாவிற்கான பயிற்சிகள்:

இரண்டு ஆசனங்களை மட்டுமே நாம் பின்பற்ற இருக்கிறோம். வஜ்ராசனமும் சுகாசனமும்.

இணையத்தில் வஜ்ராசனம் பற்றி நிறையத் தளங்களில் சொல்லப்பட்டுள்ளது. கூகிள் தேடுபொறியில் “யோகாசனா” என்றோ “வஜ்ராசனா” என்றோ தேடிப் பாருங்கள்.

வஜ்ராசனம் என்பது குதிகால்களின் மேல் அமர்வது. வலது கால் பெருவிரலை இடது கால் பெருவிரலின் மீது வைத்துக் கொள்ள வேண்டும். குதிகால்களை முடிந்த அளவு விலக்கி வைத்துக் கொண்டு அவற்றின் மீது அமர வேண்டும். இசுலாமிய நண்பர்கள் தொழுகையின் போது இந்த முறையில் தான் அமர்ந்து தொழுகை செய்வார்கள். பார்க்க (இணையத்தில் கிடைத்த) படம் 1 :





சுகாசனம் என்பது சாதாரணமாக சம்மணமிட்டு அமர்வது. இந்த இரண்டு ஆசனங்களும் செய்வது மிக எளிது.

பயிற்சி 1:

முதலில் வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். முதுகு நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். இரண்டு கைகளிலும் கட்டைவிரலையும் ஆட்காட்டி விரலையும் இணைத்து ஒரு வளையம்போல் ஆக்கிக் கொள்ளுங்கள். கைகளைத் தொடையின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கட்டைவிரல்கள் அடிவயிற்றை அழுத்தியபடி இருக்க வேண்டும். பார்க்க படம் 2.





மூச்சை ஆழமாக உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள். பிறகு மூச்சை மெதுவாக வெளியேற்றியவாறு முன்புறம் குனியுங்கள். முடிந்தவரை குனியுங்கள். (மூக்கு தரையை நோக்கி வர வேண்டும். தரையைத் தொட வேண்டியதில்லை) இடுப்பு கால்களின் மேல் அமர்ந்தபடியே இருக்க வேண்டும். இடுப்பைத் துாக்கக் கூடாது. பார்க்க படம் 3, 4. இப்போது மெதுவாக மூச்சை உள்ளிழுத்தபடி நிமிர்ந்து பழைய (அமர்ந்த) நிலைக்கு வர வேண்டும்.






இதனை ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். அவசரமின்றி பதட்டமின்றி நிதானமாகக் கண்களை மூடியபடி செய்யலாம். குனியும் போது மூச்சை வெளியிடுதலும் நிமிரும் போது மூச்சை உள்ளிழுத்தலும் ஒரே சீராக நடைபெற வேண்டும். மூச்சை விட்டு விட்டு இடைநிறுத்துதல் கூடாது.

பயிற்சி 2:

அடுத்த பயிற்சியில் இரண்டு கட்டைவிரல்களையும் உள்ளங்கைக்குள் மடக்கி மற்ற விரல்களால் மூடி (குத்துச் சண்டையில் கைகளை மடக்குதல் போல) தொடையின் மேல், அடிவயிற்றுக்குக் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைவிரல்களும் ஒன்றை ஒன்றும், அடிவயிற்றையும் தொட்டுக் கொண்டிருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும். பார்க்க படம் 5, 6, 7. பிறகு முதல் பயிற்சியில் செய்தது போலவே மூச்சை வெளியிட்டபடி குனிந்து மூச்சை உள்ளிழுத்தபடி நிமிர வேண்டும். பார்க்க படம் 8. இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்.







பயிற்சி 3:

சாதாரணமாக சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவும். இதுவே சுகாசனம். உடல் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். இப்போது வலது உள்ளங்கையால் தொப்புளை மூடிக் கொள்ளவும். இடது கையால் வலது காதைத் தொட்டபடி ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடவும். இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். மூச்சை வெளியிடுதலும் மூச்சை உள்ளிழுத்தலும் தடைப்படாமல் ஒரே சீராக நடைபெற வேண்டும். பார்க்க படம் 9.




பயிற்சி 4:

இதில் இடது உள்ளங்கையால் தொப்புளை மூடிக் கொள்ளவும். வலது கையால் இடது காதைத் தொட்டபடி ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடவும். இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். பார்க்க படம் 10.





பயிற்சி 5:

இதில் இடது உள்ளங்கையால் வலது காதைத் மூடிக் கொள்ளவும். வலது உள்ளங்கையால் இடது காதைத் மூடிக் கொள்ளவும். ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடவும். இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். பார்க்க படம் 11.




பயிற்சி 6:

இதில் இடது உள்ளங்கையால் இடது காதைத் மூடிக் கொள்ளவும். வலது உள்ளங்கையால் வலது காதைத் மூடிக் கொள்ளவும். ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடவும். இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். பார்க்க படம் 12.




பயிற்சி 7:

கண்களை மூடிக் கொண்டு இடது உள்ளங்கையால் இடது கண்ணையும் வலது உள்ளங்கையால் வலது கண்ணையும் மூடிக் கொள்ளவும். ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடவும். இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்.

இந்தப் படங்களை எல்லாம் குருவின் தமிழ் நுாலிலிருந்து ஸ்கேன் செய்து இணைத்துள்ளேன்.

இந்தப் பயிற்சிகள் எல்லாம் இந்திய நாடெங்கும், சிங்கை, அரபு நாடுகள் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் உள்ள மனவளக்கலை மன்றங்களில் இலவசமாகவே சொல்லித் தரப் படுகின்றன. அந்த மன்றங்களில் ஆசிரியரிடமிருந்து நேரடியாகக் கற்றுக் கொள்வதில் நிறையப் பலன்கள் உண்டு.

இந்தப் பயிற்சி நுாலைத் தமிழ், ஆங்கிலம் இன்னும் பல இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளார்கள். என்னிடமுள்ள தமிழ் நுால் நாற்பத்து ஏழாம் பதிப்பு. இதிலிருந்தே அந்த நுாலின் பயனை அறிந்திருப்பீர்கள்.

இந்த நுாலின் முடிவில் குரு சொல்லியுள்ள சில கருத்துக்கள் மிகவும் நெகிழச் செய்பவை.

“இந்த உடற்பயிற்சிகளைத் தினமும் செய்தால் உடலின் எல்லா உறுப்புக்களும் முறையாக இயங்கும். அலுவலகத்தில் எட்டு மணி நேரத்தில் செய்யும் வேலையை ஆறே மணி நேரத்தில் முடிக்கும் திறமை, வல்லமை வந்துவிடும். இவற்றைத் தினமும் செய்வதால் தொழிலில் சிறப்பு, குடும்பத்தில் சிறப்பு, மனதில் அமைதி கிட்டும்.

இந்த உடற்பயிற்சி கற்றுத் தருவதற்குக் கணிசமான கட்டணம் ரூ. 1000 என்று விதித்து விளம்பரப்படுத்தினால், மக்கள் தேடி வருவார்கள். ஆனால் ஏழை மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காகவே நாம் இதை இலவசமாகக் கற்றுக் கொடுக்கிறோம். இதனால் நீங்கள் பயன் பெற்று எனக்கு ஏதாகிலும் பதில் செய்ய வேண்டும் என்றால், ஒரு பத்துப் பேருக்கு நீங்கள் இதைச் சொல்லிக் கொடுங்கள். அது போதும்...”

<-----முந்தைய பகுதி......................அடுத்த பகுதி----->
|
Comments:
Is it enough to do only the given ashanas? or has to do any other for warming up? is it wise to teach this to a 3 yr old?
 
please read this series of articles in toto. follow the guru's book simplified exercises or goto a nearby centre as advised in the article. normally it is advisable to start doing yoga after the age of 10. for 3 year old, please consult a yoga guru
achimakan
 
Keep up the good work » » »
 
i will try to follow this
 
Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?