<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

21.5.20

பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை...
(வெவ்வேறு சமயங்களில் நான் எழுதியது)

பிறந்தநாள் உனக்கு இன்று
பெற்றவர் மகிழ்ந்து போற்ற!
பிறந்தநாள் உனக்கு இன்று
பிறர் எல்லாம் புகழ்ந்து பாட!

 பிறந்தநாள் அன்பும் அறமும்
பிறக்கும் நாள்; துன்பமெல்லாம்
 மறந்தநாள்; இதனைப் போல
மற்றெல்லா நாளும் வாழ்க!

 பிறந்ததன் பயனை எண்ணிப்
 பெருமைகள் சூடிக் கொள்க!
பிறந்ததால் உலகு வாழும் 
பெருவழி அமைத்து காண்க!

-ஆச்சிமகன்

ஓராண்டு நிறைவுநாளில்
உளமாற வாழ்த்துகிறேன்!

நூறாண்டு வாழ்ந்திடுக
நோய்நொடி ஏதுமின்றி!

சீராண்டு சிறப்புற்று
செயற்கரிய செயல்செய்து

பார்போற்ற வளர்கவெனப்
படைத்தவனை வேண்டுகிறேன்!

           _ஆச்சிமகன்


குட்டிக் குட்டிப் பாப்பாவுக்கு
குதூகலிக்கும் பிறந்தநாள்

சுட்டித்தனங்கள் செய்வாளாம்
சொந்தம் மகிழ வளர்வாளாம்

எட்டுத்திசையும் புகழ்பரப்பி
இமயம்போல உயர்வாளாம்

கொட்டுமுரசே கொட்டென்று
கொட்டிமுழக்கி வாழ்த்திடுவேன்

--ஆச்சிமகன்
| (0) விரிவான மறுமொழி

This page is powered by Blogger. Isn't yours?