சுட்டிகள்
தொடர்புக்கு
முந்தைய பதிவுகள்
கருவூலம்
"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.
9.2.05
பொட்டுவடிவ மின்கலன்கள் ஒன்றரை ரூபாய்க்கு
கைக்கடிகாரம் ஓடாமல் நின்று போனதால் மின்கலனை மாற்றுவதற்காகக் கடிகாரக் கடைக்குச் சென்றேன். அதற்கான பொட்டுவடிவச் சிறு மின்கலன் 35 ரூபாய் ஆகும் என்றார் கடைக்காரர். தெருவோரம் கடிகாரமே 20 ரூபாய்க்குக் கிடைக்கிறதே மின்கலனுக்கு மட்டும் ஏன் 35 ரூபாய் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். அதெல்லாம் மட்டமான சீனப் பொருட்களாய் இருக்கும். நாங்கள் தருவது உயர்ந்த ஜப்பானிய மின்கலனாக்கும் என்றார்.
பத்து ரூபாய்க்கும் எழுதுகோல் கிடைக்கிறது. நுாறு ரூபாய்க்கும் கிடைக்கிறது. எழுதினால் போதுமல்லவா. இதிலென்ன ஆடம்பரம் வேண்டிக்கிடக்கிறது? மின்கலமோ கடிகாரத்திற்குள் இருப்பது.. இதில் சீனா என்ன ஜப்பான் என்ன என்று நினைத்துக் கொண்டு, உங்களுடைய உயர்ந்த பொருளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து பொட்டு மின்கலன்கள் என்று குறிப்பிட்டு இணையத்தில் தேடிப் பார்த்தேன்.
கைக்கடிகாரங்களிலும் விளையாட்டு சாதனங்களிலும் மின்னணுக் கருவிகளிலும் அதிகமாகப் பயன்படும் சில வகைப் பொட்டு மின்கலங்கள் அவற்றிற்கு இணையாகப் பிற தயாரிப்பாளர்கள் விற்கும் பொட்டு மின்கலங்கள் அவற்றின் தடிம, குறுக்கு அளவுகள் போன்ற பல தகவல்களும் கிடைத்தன. இந்தத் தகவல்களை இங்கே தருகிறேன்: ஒரே வரிசையில் உள்ளவை எல்லாம் சமமான தன்மை உடையவை. கடைசியில் குறிக்கப்பட்டுள்ளது மின்கலத்தின் குறுக்களவும் தடிமனும் மி.மீயில்:
AG series SR series D series GP series 6xx series Dimensions
AG1 SR621SW D364 GP364 602 6.8 X 2.1
AG2 SR726SW D397 GP397 607 7.9 X 2.6
AG3 SR736 D392 GP392 LR736 7.9 X 3.6
AG4 SR626SW D377 GP377 606 6.8 X 2.6
AG5 SR754W D393 GP393 SR48 7.5 X 5.9
AG6 SR920SW D371 SR69 605 9.5 X 2.1
AG7 SR927SW SR57 GP399 613 9.5 X 2.6
AG8 SR1120SW SR55 GP391 609 11.6 X 2.1
AG9 SR936SW D394 GP394 625 9.5 X 3.6
AG10 SR1130W D389 SR54 626 11.6 X 3.1
AG11 SR721SW D362 SR721 601 7.9 X 2.1
இந்தப் புள்ளி விபரங்களால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கக் கூடும். பொதுவாகக் கடிகாரக்கடைகளில் ஜப்பானிய மாக்செல் போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் SRxxxSW வகை மின்கலங்களைத் தான் பயன்படுத்துகிறார்கள். இவைதான் தனியாக வாங்கினால் 25.. 35 ரூபாய்களுக்கும் பத்து உள்ள தொகுப்பாக மொத்த விலையில் வாங்கினால் சுமார் 10 ரூபாய்க்கும் கிடைக்கின்றன.
ஆனால் AGxx வகை மின்கலங்கள் விலை மிகமிக மலிவானவை. AG1 மின்கலம் ஒன்று மதுரையில் ஒன்றரை ரூபாய் மட்டுமே. அதே சில்வர் ஆக்சைடுதான் இதிலும் பயன்படுத்தப்படும் வேதியல் பொருள்.
எனவே இணையான மின்கலன் பற்றிய தகவல் குறைந்த செலவில் கடிகாரங்கள். கணக்கிகள் போன்றவற்றைப் பயன்படுத்த நமக்குத் துணை புரியக் கூடும்.
|
(5) விரிவான மறுமொழி

AG series | SR series | D series | GP series | 6xx series | Dimensions |
---|---|---|---|---|---|
AG1 | SR621SW | D364 | GP364 | 602 | 6.8 X 2.1 |
AG2 | SR726SW | D397 | GP397 | 607 | 7.9 X 2.6 |
AG3 | SR736 | D392 | GP392 | LR736 | 7.9 X 3.6 |
AG4 | SR626SW | D377 | GP377 | 606 | 6.8 X 2.6 |
AG5 | SR754W | D393 | GP393 | SR48 | 7.5 X 5.9 |
AG6 | SR920SW | D371 | SR69 | 605 | 9.5 X 2.1 |
AG7 | SR927SW | SR57 | GP399 | 613 | 9.5 X 2.6 |
AG8 | SR1120SW | SR55 | GP391 | 609 | 11.6 X 2.1 |
AG9 | SR936SW | D394 | GP394 | 625 | 9.5 X 3.6 |
AG10 | SR1130W | D389 | SR54 | 626 | 11.6 X 3.1 |
AG11 | SR721SW | D362 | SR721 | 601 | 7.9 X 2.1 |
இந்தப் புள்ளி விபரங்களால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கக் கூடும். பொதுவாகக் கடிகாரக்கடைகளில் ஜப்பானிய மாக்செல் போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் SRxxxSW வகை மின்கலங்களைத் தான் பயன்படுத்துகிறார்கள். இவைதான் தனியாக வாங்கினால் 25.. 35 ரூபாய்களுக்கும் பத்து உள்ள தொகுப்பாக மொத்த விலையில் வாங்கினால் சுமார் 10 ரூபாய்க்கும் கிடைக்கின்றன.
ஆனால் AGxx வகை மின்கலங்கள் விலை மிகமிக மலிவானவை. AG1 மின்கலம் ஒன்று மதுரையில் ஒன்றரை ரூபாய் மட்டுமே. அதே சில்வர் ஆக்சைடுதான் இதிலும் பயன்படுத்தப்படும் வேதியல் பொருள்.
எனவே இணையான மின்கலன் பற்றிய தகவல் குறைந்த செலவில் கடிகாரங்கள். கணக்கிகள் போன்றவற்றைப் பயன்படுத்த நமக்குத் துணை புரியக் கூடும்.
3.2.05
நுட்பங்களைக் கற்பது எப்படி?
எங்கள் வீட்டில் எரிவாயு அடுப்பு சில நாட்களாகச் சரியாக எரியவில்லை. சமையல் முடிக்க நீண்ட நேரம் ஆகிறதென்ற முணுமுணுப்பு பொறுக்க முடியாமல் போனதால் அதனைக் கழட்டிச் சரி செய்து விடலாம் என்று திருப்புளி குறடு உள்ளிட்ட ஆயுதங்களுடன் பணியில் இறங்கினேன். குமிழியின் பின்புறம் உள்ள நுண்புழையில் உள்ள அடைப்பை நீக்கி விட்டால் எரிவாயு நன்கு வெளியேறும். அடுப்பு நன்கு எரியும். எளிய வேலைதான்.
பாதுகாப்பு கருதி கொள்கலனிலிருந்து வாயுக் குழாயைத் தனியே பிரித்து எடுத்து விட்டேன். நீண்ட உலோகக் குழலுடன் கூடிய எரியும் பகுதியைப் பிரிப்பது கடினமாக இருந்தது. அதனை அடுப்புடன் இணைக்கும் மறையுடன் கூடிய திருகாணியை கழட்ட முடியவில்லை. எவ்வளவு முயன்றும் திருகாணியின் பிளவை மழுங்கியதே அன்றி மறை கழலவில்லை. திருகாணியை அறுத்துவிடலாம் என்று இரம்பத்தை எடுத்து வந்து முயற்சி செய்தேன். அடுப்பின் அமைப்பு இரம்பத்தைச் செலுத்துவத்ற்கு ஏற்புடையதாக இல்லை.
மிகவும் வெறுத்துப் போய் அடுப்பைத் தூக்கிக் கொண்டு பழுது பார்க்கும் கடை ஒன்றை நாடிச் சென்றேன். என்ன பிரச்சினை என்று விசாரித்த கடைக்காரர் உளி ஒன்றையும் சுத்தியல் ஒன்றையும் எடுத்துவந்து மறையில் ஒருமுறை தட்டினார். அது உடைந்து சிதறியது. திருகாணியை தூர எறிந்துவிட்டு வேறு திருகாணியும் மறையும் போட்டுக் கொடுத்தார். நமக்கு இந்த எண்ணம் வராமல் போனதே என்று நான் வியந்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.
பல நேரங்களில் இப்படித் தான் ஆகி விடுகிறது. பிரச்சினைகளுடன் நாம் போராடி போராடிச் சோர்வடையும் போது அதற்கான எளிய தீர்வு வேறு எங்கோ இருக்கிறது. வாழ்க்கைப் பிரச்சினைகளை விடுங்கள். எளிய தொழில் நுட்பப் பிரச்சினைகளில் கூட நாம் அறிந்திராதவற்றை நமக்குத் தோன்றாதவற்றைத் தெரிந்து கொள்ள என்ன வழி?
இவற்றுக்கெல்லாம் கூட வலைத் தளங்களோ பதிவுகளோ உள்ளனவா?
|
(3) விரிவான மறுமொழி

1.2.05
கண்களை குருடாக்கும் கருவி மலிவாகக் கிடைக்கிறது
.
லேசர் ஒளிக்கற்றை என்பது குவிக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட ஒளிக்கற்றை. நீண்ட தொலைவுக்கு பரவாமல் கூரிய கற்றையாகச் செல்லும் இந்த லேசர் ஒளியை ஒரு போதும் நேரடியாகக் கண்களால் பார்த்துவிடக் கூடாது. உடனடியாக அது பார்வையைப் பறித்து விடும். இத்தகைய அபாயகரமான கருவி மிக மலிவாகக் கிடைக்கிறது என்பது தான் கொடுமை.
மதுரைக்கு ஒரு வேலைக்காகச் சென்றிருந்தேன். காரைக்குடிக்குத் திரும்புவதற்காக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்து காரைக்குடி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். பேருந்து புறப்படச் சற்று நேரம் இருந்ததால் வழக்கமாக வரும் பிச்சைக்காரர்கள், வியாபாரிகள் போன்ற பலரும் கூவியபடி பேருந்தை மொய்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆரஞ்சுப் பழங்கள் குமிழ்முனைப் பேனாக்கள் இவற்றோடு சாவிக் கொத்திற்கான சங்கிலியும் வளையமும் இணைக்கப் பட்ட லேசர் விளக்குகளை ஒருவர் விற்றுக் கொண்டிருந்தார். வெவ்வேறு வடிவில் லேசர் ஒளிக்கற்றையை வெளியேற்ற ஏதுவாக மாற்றக்கூடிய முனைப்பகுதிகளோடு நாற்பது ரூபாய்களுக்குத் தருவதாகச் சொன்னார்.
இத்தகைய லேசர் விளக்குகளை முன்பெல்லாம் கருத்தரங்கங்களில் பேசுபவர்கள் வைத்திருக்கக் கண்டிருக்கிறேன். அவர்களும் கூடப் பொறுப்பற்ற விதமாகப் பார்வையாளர்களின் கண்களை நோக்கி இந்த ஒளியை அடித்து விடக்கூடாதே என்று அஞ்சியிருக்கிறேன். இப்போது இதன் ஆபத்தை உணராத பாமரரும் வாங்கும் வகையில் விற்கப்படுவது கண்டு மனம் பதறியது.
வீட்டுக்கு வந்தும் என் பையனிடம் உங்கள் பள்ளியில் எந்த மாணவனாவது லேசர் விளக்கோடு கூடிய சாவிக் கொத்து வைத்திருக்கிறானா உனக்குத் தெரியுமா என்று கேட்டேன். நிறையப் பேர் வைத்திருக்கிறார்கள். என் வகுப்பிலேயே இரண்டு மூன்று பேரிடம் இருக்கிறது என்று சொன்னான். அது மிகவும் ஆபத்த்தானது. அந்த ஒளியைப் பார்த்தாலோ விளையாட்டாகக் கூட ஒருவர் கண்ணில் அடித்தாலோ கூடக் கண் பார்வை பறி போய்விடும் எனவே அதனை பயன்படுத்த வேண்டாம் என்று அவர்களிடமெல்லாம் சொல் என்றேன்.
பாமர மக்கள் நிறைந்த இந்த நாடு போகும் போக்கை நினைத்தால் பயமாக உள்ளது. நமக்குத் தேவையற்ற அன்னியப் பொருட்கள் வந்து குவிந்து நம் வாழ்வையே கேள்விக்குறி ஆக்குகின்றன.
|
(0) விரிவான மறுமொழி