சுட்டிகள்
தொடர்புக்கு
முந்தைய பதிவுகள்
கருவூலம்
"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.
1.2.05
கண்களை குருடாக்கும் கருவி மலிவாகக் கிடைக்கிறது
.
லேசர் ஒளிக்கற்றை என்பது குவிக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட ஒளிக்கற்றை. நீண்ட தொலைவுக்கு பரவாமல் கூரிய கற்றையாகச் செல்லும் இந்த லேசர் ஒளியை ஒரு போதும் நேரடியாகக் கண்களால் பார்த்துவிடக் கூடாது. உடனடியாக அது பார்வையைப் பறித்து விடும். இத்தகைய அபாயகரமான கருவி மிக மலிவாகக் கிடைக்கிறது என்பது தான் கொடுமை.
மதுரைக்கு ஒரு வேலைக்காகச் சென்றிருந்தேன். காரைக்குடிக்குத் திரும்புவதற்காக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்து காரைக்குடி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். பேருந்து புறப்படச் சற்று நேரம் இருந்ததால் வழக்கமாக வரும் பிச்சைக்காரர்கள், வியாபாரிகள் போன்ற பலரும் கூவியபடி பேருந்தை மொய்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆரஞ்சுப் பழங்கள் குமிழ்முனைப் பேனாக்கள் இவற்றோடு சாவிக் கொத்திற்கான சங்கிலியும் வளையமும் இணைக்கப் பட்ட லேசர் விளக்குகளை ஒருவர் விற்றுக் கொண்டிருந்தார். வெவ்வேறு வடிவில் லேசர் ஒளிக்கற்றையை வெளியேற்ற ஏதுவாக மாற்றக்கூடிய முனைப்பகுதிகளோடு நாற்பது ரூபாய்களுக்குத் தருவதாகச் சொன்னார்.
இத்தகைய லேசர் விளக்குகளை முன்பெல்லாம் கருத்தரங்கங்களில் பேசுபவர்கள் வைத்திருக்கக் கண்டிருக்கிறேன். அவர்களும் கூடப் பொறுப்பற்ற விதமாகப் பார்வையாளர்களின் கண்களை நோக்கி இந்த ஒளியை அடித்து விடக்கூடாதே என்று அஞ்சியிருக்கிறேன். இப்போது இதன் ஆபத்தை உணராத பாமரரும் வாங்கும் வகையில் விற்கப்படுவது கண்டு மனம் பதறியது.
வீட்டுக்கு வந்தும் என் பையனிடம் உங்கள் பள்ளியில் எந்த மாணவனாவது லேசர் விளக்கோடு கூடிய சாவிக் கொத்து வைத்திருக்கிறானா உனக்குத் தெரியுமா என்று கேட்டேன். நிறையப் பேர் வைத்திருக்கிறார்கள். என் வகுப்பிலேயே இரண்டு மூன்று பேரிடம் இருக்கிறது என்று சொன்னான். அது மிகவும் ஆபத்த்தானது. அந்த ஒளியைப் பார்த்தாலோ விளையாட்டாகக் கூட ஒருவர் கண்ணில் அடித்தாலோ கூடக் கண் பார்வை பறி போய்விடும் எனவே அதனை பயன்படுத்த வேண்டாம் என்று அவர்களிடமெல்லாம் சொல் என்றேன்.
பாமர மக்கள் நிறைந்த இந்த நாடு போகும் போக்கை நினைத்தால் பயமாக உள்ளது. நமக்குத் தேவையற்ற அன்னியப் பொருட்கள் வந்து குவிந்து நம் வாழ்வையே கேள்விக்குறி ஆக்குகின்றன.
|

Comments:
Post a Comment