சுட்டிகள்
தொடர்புக்கு
முந்தைய பதிவுகள்
கருவூலம்
"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.
3.2.05
நுட்பங்களைக் கற்பது எப்படி?
எங்கள் வீட்டில் எரிவாயு அடுப்பு சில நாட்களாகச் சரியாக எரியவில்லை. சமையல் முடிக்க நீண்ட நேரம் ஆகிறதென்ற முணுமுணுப்பு பொறுக்க முடியாமல் போனதால் அதனைக் கழட்டிச் சரி செய்து விடலாம் என்று திருப்புளி குறடு உள்ளிட்ட ஆயுதங்களுடன் பணியில் இறங்கினேன். குமிழியின் பின்புறம் உள்ள நுண்புழையில் உள்ள அடைப்பை நீக்கி விட்டால் எரிவாயு நன்கு வெளியேறும். அடுப்பு நன்கு எரியும். எளிய வேலைதான்.
பாதுகாப்பு கருதி கொள்கலனிலிருந்து வாயுக் குழாயைத் தனியே பிரித்து எடுத்து விட்டேன். நீண்ட உலோகக் குழலுடன் கூடிய எரியும் பகுதியைப் பிரிப்பது கடினமாக இருந்தது. அதனை அடுப்புடன் இணைக்கும் மறையுடன் கூடிய திருகாணியை கழட்ட முடியவில்லை. எவ்வளவு முயன்றும் திருகாணியின் பிளவை மழுங்கியதே அன்றி மறை கழலவில்லை. திருகாணியை அறுத்துவிடலாம் என்று இரம்பத்தை எடுத்து வந்து முயற்சி செய்தேன். அடுப்பின் அமைப்பு இரம்பத்தைச் செலுத்துவத்ற்கு ஏற்புடையதாக இல்லை.
மிகவும் வெறுத்துப் போய் அடுப்பைத் தூக்கிக் கொண்டு பழுது பார்க்கும் கடை ஒன்றை நாடிச் சென்றேன். என்ன பிரச்சினை என்று விசாரித்த கடைக்காரர் உளி ஒன்றையும் சுத்தியல் ஒன்றையும் எடுத்துவந்து மறையில் ஒருமுறை தட்டினார். அது உடைந்து சிதறியது. திருகாணியை தூர எறிந்துவிட்டு வேறு திருகாணியும் மறையும் போட்டுக் கொடுத்தார். நமக்கு இந்த எண்ணம் வராமல் போனதே என்று நான் வியந்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.
பல நேரங்களில் இப்படித் தான் ஆகி விடுகிறது. பிரச்சினைகளுடன் நாம் போராடி போராடிச் சோர்வடையும் போது அதற்கான எளிய தீர்வு வேறு எங்கோ இருக்கிறது. வாழ்க்கைப் பிரச்சினைகளை விடுங்கள். எளிய தொழில் நுட்பப் பிரச்சினைகளில் கூட நாம் அறிந்திராதவற்றை நமக்குத் தோன்றாதவற்றைத் தெரிந்து கொள்ள என்ன வழி?
இவற்றுக்கெல்லாம் கூட வலைத் தளங்களோ பதிவுகளோ உள்ளனவா?
|

Comments:
ஆச்சி மகன்,
www.howstuffworks.com மற்றும் www.ehow.com பொன்ற வலை தளங்களில் ஓரளவு சில நுட்ப விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
தாரா

நன்றி தாரா. இந்தத் தளங்களைப் பற்றி முன்பே அறிந்துள்ளேன்.
இன்னும் நுணுக்கமான விபரங்களைத் தரும் தளங்களை யாராவது சொல்கிறார்களா பார்ப்போம்.
Post a Comment