<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

22.6.04

நோயற்ற வாழ்வு..6 

ஓமியோபதியை ஜெர்மன் மருத்துவம் என்கிறார்கள். ஜெர்மானியரால் உருவாக்கப்பட்டாலும் இன்று இந்தியாவில் தான் நிறைய ஓமியோபதி மருத்துவர்கள் உள்ளார்கள்.

ரெய்கி, அக்கு பஞ்ச்சர் போன்றவை சீன, ஜப்பானிய நாடுகளில் உருவான மருத்துவ முறைகள். தொடுமுறையில் ஆற்றலைச் செலுத்தி நோயை குணப்படுத்தலாம் என்பது ரெய்கி. பெரும்பாலும் நம்பிக்கை சார்ந்த மருத்துவ முறை.

இன்னும் பல்வேறு மருத்துவ முறைகளைப் பலரும் பின்பற்றுகிறார்கள். அல்லோபதி ஒன்றுதான் நோய்க்கான தீர்வு என்று முடிவு செய்துவிடக் கூடாது என்பது தான் என் எண்ணம்.

எனக்கு சில வருடங்களுக்கு முன்பு தினமும் மாலை நேரத்தில் வயிற்று வலி வரும். தொப்புளை ஒட்டிய பகுதியில் மாலை தொடங்கி இரவு துாங்கும் வரை. துாங்கியதும் வலி மறந்து போகும். அடுத்த நாள் மீண்டும் தொடரும். அல்சர் என்றார் ஒரு பிரபல மருத்துவர். அமீபியாசிஸ் என்றார் வேறொருவர். அப்பென்டிசைடிஸின் ஆரம்பம் என்று மருந்து கொடுத்தார் இன்னொருவர். வயிற்றுப் âச்சி என்றும் சொன்னார் ஒருவர். ஆறு மாதங்களுக்கு மேலாகியது. வலி விடவேயில்லை.

பக்கத்து வீட்டுக்கு விருந்துக்கு வந்த பாட்டி ஒருவர் பெருங்காயமும் பனங்கற்கண்டும் சாப்பிடச் சொன்னார். தினமும் மூன்று வேளை வெறும் வயிற்றில். பத்து நாட்கள் சாப்பிட்டிருப்பேன். வலி நின்று விட்டது. திரும்ப வரவேயில்லை. பாட்டிக்கு என்ன பட்டம் கொடுக்கலாம் எம்.டி யா? எம்.பி.பி.எஸ்ஸா?

பொதுவாக மருந்துகள் எல்லாவற்றையும் நச்சுப் பொருள் என்று கருதுகிறார்கள். முள்ளை முள்ளால் எடுப்பது போல நோயை மருந்து முறியடிக்கிறது. முள் குத்தாத ஒருவரை முள்ளால் காயப்படுத்துதல் தவறு என்பது போல குறிப்பிட்ட ஒரு நோய் தாக்காத ஒருவருக்கு அதற்கான மருந்துகளை அளிப்பதும் தவறுதான்.

இந்த இடத்தில் மருந்துகளின் குணங்களைப் பற்றி சிலவற்றைக் கூற வேண்டும். அறிவியல் âர்வமாக உருவாக்கப்பட்ட எல்லா மருந்துகளுக்கும் அதன் தயாரிப்பாளர் குறிப்புச் சிட்டை (literature) ஒன்றை மருந்துடன் இணைத்தே கொடுப்பார்கள். அந்தச் சிட்டையில் எந்த வகையான நோய்க்கு, ஒரு நாளில் எத்தனை முறை, எவ்வயதினருக்கு அம்மருந்தை அளிக்க வேண்டும் என்பது போன்ற விபரங்கள் இருக்கும். அத்துடன் வேறு எந்த வகையான பாதிப்பு உள்ளவர்களுக்கு அம்மருந்தைக் கொடுக்கக் கூடாது என்பதும் தவறாகக் கொடுத்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதும் (contra-indications and anti-dotes) குறிக்கப்பட்டிருக்கும்.

இப்போதெல்லாம் மருந்தின் பெயரைக் குறிப்பிட்டுத் தேடினால் இணையத்தில் இத்தகைய குறிப்புகள் நிறையவே கிடைக்கின்றன. மருத்துவர்களையே முழுவதும் நம்பியிராமல் நாம் அதிகம் பயன்படுத்தும் மருந்துகளைப் பற்றியாவது நாம் அறிந்திருத்தல் நலம்.

என் நண்பரின் ஆறுமாதக் குழந்தை. மிகவும் உடல்நிலை சரியில்லாததால் பிரபல மருத்துவ மனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருப்பதாகத் தகவல் அறிந்து அங்கு சென்றிருந்தேன். நான் சென்ற போதுதான் குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து நோயாளி அறை ஒன்றுக்கு மாற்றியிருந்தார்கள். ஆனால் அந்தக் குழந்தை அழுது கொண்டே இருந்தது. பணியிலிருந்த மருத்துவரிடம் இது குறித்து சொன்ன போது குழந்தை அழாமல் துாங்குவதற்காக மருந்து ஒன்றை எழுதிக் கொடுத்தார். மருந்துச் சிட்டையை எடுத்துக் கொண்டு, நானே சென்று, அந்த மருந்தை வாங்கி வந்தேன். வெளிப்புற அட்டையைப் பிரித்து மருந்துக் குப்பியைத் தாயிடம் கொடுத்து விட்டு, அதனுடன் இருந்த விபரத்தாளினைப் படித்தவனுக்கு அதிர்ச்சி. வயிற்றுப் போக்குள்ள குழந்தைகளுக்கு இந்த மருந்தைக் கொடுக்கக் கூடாது என்ற எச்சரிக்கை அதில் இருந்தது. வயிற்றுப் போக்கினால் அவதியுற்றுத்தான் அந்தக் குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தது.

உடனே மருத்துவரிடம் ஓடி இது பற்றிக் கேட்டேன். அவர் வாயையே திறக்கவில்லை. தவறு செய்து விட்டோம் என்று நினைத்தாரோ என்னவோ. ஆனால் அருகிலிருந்த செவிலியர்கள் என்னிடம் சண்டைக்கு வந்து விட்டார்கள். மருத்துவர்கள் எல்லாம் படித்து விட்டுத்தான் வந்திருப்பார்கள் நீங்கள் ஒன்றும் அவருக்கு வழி காட்ட வேண்டாம் என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள். இவர்களிடம் பேசிப் பயனில்லை என்று எண்ணிய நான் குழந்தையின் தாயிடம், மிகத் தேவைப்பட்டால் மட்டும் இந்த மருந்தைக் கொடுங்கள் என்று சொல்லி விட்டு வந்தேன்.

படிப்பறிவற்ற நாட்டில் எந்த அளவுக்கு மக்கள் வஞ்சிக்கப் படுகிறார்கள் என்பதைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

எனது தாய்மாமன் பற்றி இங்கே எழுதியே ஆக வேண்டும். ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் மேலாளராக இருந்தார் அவர். நாற்பதை ஒட்டிய வயது. ஒருமுறை அவருக்கு அம்மை நோய் கண்டது. அம்மை வந்தால் மருத்துவரைப் பார்ப்பது தெய்வக் குற்றமாகி விடும் என்ற நம்பிக்கைகள் இருந்ததால் மருத்துவரிடம் செல்லவில்லை. ஆனால் நிறைய கணக்கு வழக்குகள் எழுத வேண்டிய பணியில் இருந்ததால் கை வலி இருந்திருக்கிறது. கை வலி தாங்க முடியாமல் போன ஒரு நாள் தன் மனைவியை அருகிலிருந்த மருத்துவரிடம் அனுப்பி அம்மை போட்டிருப்பதையும் சொல்லிக், கை வலிக்கு மருந்து வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

அந்த முட்டாள், வலி நிவாரணி மருந்து (Analgin) எழுதிக் கொடுத்திருக்கிறார். அம்மை நோய் இருந்தால், உடல் முழுதும் அரிப்பு, தினவு இருக்கும். உடல், நோய்க்கிருமிகளுக்கு எதிராகப் போராடி வென்றெடுக்கும். ஆனால் இந்த வலி நிவாரணி, உடலின் அரிப்பை இல்லாமல் செய்து விட்டது. நோய்க்கிருமிகள் பெருகி அவர் இரண்டு நாட்களில் இறந்தே போனார்.

உடலில் நோய்க்கிருமிகள் அத்துமீறி நுழையும் போது உடல் அதன் வெப்பநிலையைச் சற்று கூட்டி நோய்க்கிருமிகளை அழிக்கிறது. மூலகாரணத்தைக் கண்டறியாமல்.. நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்தை அளிக்காமல்.. உடல் வெப்பநிலையை மட்டும் குறைத்தால் என்ன ஆகும்?
நோய்க்கிருமிகள் பலம் பெறும். உடல்நலம் மேலும் பாதிப்படையும்.

வயிற்றுப் போக்கு என்றால் உடலுக்கு ஒவ்வாத நச்சு உள்ளே சென்றுள்ளது என்று பொருள். அதற்கு மாற்று அளிக்காமல் வயிற்றுப் போக்கை மட்டும் நிறுத்தினால், நச்சு உள்ளேயே தங்கும். வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நோய்க்கல்ல.. நோயின் அறிகுறிக்குத் தான் அல்லோபதி மருத்துவர்கள் தீர்வு காண்கிறார்கள் என்பதற்காகத்தான் இதையெல்லாம் எழுதுகிறேன்.

"ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்" என்பதெல்லாம் கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது.. பாதிக்கப் பட்டவர்கள் நம் நெருங்கிய உறவாகவோ நட்பாகவோ இல்லாத வரை.

அர்ப்பணிப்பு மனப்பாங்குள்ள மருத்துவர்கள் குறைந்து விட்டாலும், மருத்துவத் துறையின் குறிக்கோள் பணம் சேர்ப்பதே என்று ஆகிவிட்டாலும், இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தகவல் சுரங்கத்தில் இருந்து நம்மால் எதைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது என்பது தான் நல்ல செய்தி.

பாட்டிமார்கள் அருகில் இல்லாத காலத்தில், தொண்டை வலியோ, காது வலியோ, கண் கட்டியோ கூட நம்மை முடக்கிப் போட்டுவிடக் கூடும். அத்தகைய நிலையில் இணையத்தின் பயன் அளப்பரியது.

கூகிளில் தேடி நான் கண்ட சில நல்ல மருத்துவத் தளங்களின் பெயர்களை இங்கே தருகிறேன்:

www.goaskalice.columbia.edu

www.nlm.nih.gov/medlineplus/healthtopics.html

www.health911.com

www.mothernature.com

www.mustformums.com/grandmumsrecipes/cureindex.php3

www.healthy.net

www.emedicine.com

இந்தக் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தெரிவியுங்கள்.

நீங்கள் கண்ட எளிய மருத்துவம் ஏதேனும் இருந்தாலும் சொல்லுங்கள்.


<-----முந்தைய பகுதி...........
|
Comments:
Dear friend,

Usefull information.

Thanks

with best regards

Adirai Thanga Selvarajan
 
Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?