<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

19.6.22

Projector lens hood 

 அழகப்பா கல்லூரியில் எத்தனையோ மறக்க முடியாத அனுபவங்கள். முப்பத்தி இரண்டு ஆண்டு ஆசிரியர் பணியில் எண்ணற்ற நிகழ்வுகள். எதை சொல்வது எதை விடுவது எதை மறப்பது எதை நினைப்பது.


ஒரு சில நிகழ்வுகளைச் சொல்ல முயற்சிக்கிறேன். அப்போது கணிதத்துறையில் முனைவர் ஜெயராமன் அவர்கள் துறைத் தலைவராக இருந்தார். கணிதத்துறையில் தேசிய அளவிலான மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள்.


நூலகத்திற்கு அருகில் மாநாட்டு அரங்கு ஒன்றை உருவாக்கியிருந்தோம்.


அதில் கணினி எல்சிடி ப்ரொஜெக்டர் போன்ற அனைத்து வசதிகளும் இருந்தன. நிறைய மாணவர்களுக்கான இருக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன 


அந்த மாநாடு நடந்த நாளன்று திரு ஜெயராமன் என்னை அவசரமாக அழைத்தார். உடனடியாக மாநாட்டு அரங்கிற்கு வாருங்கள் என்றார். அப்போது நான் வகுப்பில் இருந்தேன். வகுப்பு முடித்து வருகிறேன் என்றேன். இல்லை இல்லை மிக அவசரம்.


இங்கே வெவ்வேறு பல்கலைக்கழக பேராசிரியர்களும் கல்லூரி முதல்வரும் இருக்கிறார்கள். நீங்கள் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் வந்து விட்டுப் போங்கள் என்றார். வேறுவழியின்றி விரைந்து புறப்பட்டு சென்றேன்.


மாநாட்டைத் தொடங்க வேண்டியதுதான் பாக்கி. இங்கே கணினி வேலை செய்கிறது எல்சிடி ப்ரொஜெக்டர் வேலை செய்கிறது.


ஆனால் திரையில் படம் எதுவும் வரவில்லை எதோ மங்கலாக தெரிகிறது. எல்சிடி ப்ரொஜெக்டரில் ஏதோ பழுது இருக்கிறது. சற்று பாருங்கள் என்றார்.


அந்த ப்ரொஜெக்டரில் லென்சுக்கு ஒரு மூடி உள்ளது. அந்த மூடியை திறக்கும் வகையிலான ஸ்லைட் சுவிட்ச் கீழ்ப்பகுதியில் இருந்தது. நான் கையை உயர்த்தி எனது ஆட்காட்டி விரலால் அந்த ஸ்லைடு ஸ்விட்சை ஒரு புறம் தள்ளினேன். உடனே திரையில் மிகத் தெளிவாக படம் வந்துவிட்டது.


அந்த வினாடியில் அரங்கம் முழுதும் அதிர்ந்தது. சிரிப்பலைகளும் கைதட்டலும் விண்ணைப் பிளந்தன. ஜெயராமன் ஓடிவந்து என் கைகளைப் பற்றி குலுக்கினார். அந்த நாள் மறக்க முடியாத நாள் ஆகிவிட்டது...


|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?