<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

8.7.20

வலைப்பதிவு பயன் வரலாறு தொடங்கும் வழிமுறை

இன்று வலைப்பதிவுகள் பற்றி ஒரு அறிமுகம், வலைப்பதிவின் பயன்கள், அதன் வரலாறு, வலைப்பதிவை புதிதாக தொடங்கும் வழிமுறைகள் இவை பற்றியெல்லாம் பார்க்கப் போகிறோம்.

 பிளாக் என்ற சொல்லை தமிழில் வலைப்பதிவு என்று அழைக்கிறோம்.

A blog is ones personal diary open to the public.

 வலைப்பதிவு என்பதன் விளக்கமே ஒருவர் தனது தனிப்பட்ட கையேட்டை சமுதாயத்திற்கு திறந்து அளிப்பது என்பது தான்.

நீங்கள் ஒரு கவிஞராகவோ எழுத்தாளராகவோ கட்டுரையாளராகவோ  இருந்தால் வலைப்பதிவு உங்களுக்கு மிகவும் பயன்படும். உங்கள் கருத்துக்களை நீங்கள் எழுதியவற்றை உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் காணும்படி சில வினாடிகளில் உங்களால் அதனை அனுப்ப முடியும். எந்தச் செலவும் இல்லை. யாருடைய உதவியும் தேவையில்லை. நமது எழுத்துக்கள் சமுதாயம் காண விரித்து வைக்கப்பட்டிருக்கின்றன ஆர்வமுள்ளவர்கள் அதை படிப்பார்கள் கருத்துகளை தெரிவிப்பார்கள் இதுதான் வலைப்பதிவின் பயன்.

வலைப்பதிவின் வரலாறு

1994 ஜஸ்டின் ஹால் என்பவர் தனது தனிப்பட்ட குறிப்புகளை பதிவிட ஆரம்பித்தார்.

 இருந்தபோதும் 1997ல் ஜோன் பார்ஜர் என்பவர்தான் வெப்பிளாக் என்ற சொல்லை உருவாக்கினார்.

 1999ல் பிளாக் என்ற சொல் உருவானது

96 லிருந்து சாங்கா xanga என்ற வலைத்தளம் வலைப்பதிவு சேவையை வழங்கத் தொடங்கியது.

பிளாக்கர் சேவை 1999ல் ஆரம்பிக்கப்பட்டு இரண்டாயிரத்து மூன்றில் கூகுள் நிறுவனத்தால் வாங்கப்பட்டது.

 முதல் தமிழ் வலைப்பதிவு 2003 ஜனவரி முதல் நாள் கார்த்திகேயன் ராமசாமி என்பவரால் எழுதப்பட்டது.

இந்திய மொழிகளிலேயே தமிழில் தான் முதலில் வலைப்பதிவுகள் எழுதப்பட்டன ஆயினும் ஆரம்ப காலத்தில் யுனிக்கோட் என்னும் பொதுமைப்படுத்தப்பட்ட எழுத்துரு இல்லாத காரணத்தால் ஒவ்வொருவரும் வெவ்வேறு தமிழ் எழுத்துருக்களை (fonts) பயன்படுத்தியதில் நிறைய குளறுபடி இருந்தது யுனிகோட் வந்தபிறகு தமிழ் வலைப்பதிவு வளர்ச்சி அபரிமிதமாக ஆயிற்று.

இன்று சுமார் 6000  வலைப்பதிவர்கள் தமிழ்நாட்டில் உள்ளார்கள்.

கடைகள், சூப்பர் மார்க்கெட் அல்லது மால் இவற்றுக்கான வேறுபாடு நமக்கு தெரியும். ஏதாவது ஒரு பொருளை விற்றால் அது கடை. மருந்துக் கடை மளிகைக் கடை என்றெல்லாம் சொல்கிறோம்.

பல்வேறு வகைப்பட்ட பொருட்கள் கிடைக்கும் என்றால் அது சூப்பர் மார்க்கெட் அல்லது மால்.

 நிறுவனங்களின் வெப்சைட் கூட அப்படித்தான் இந்தியன் வங்கி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எல்ஐசி போன்றவை தமக்கான வெப்சைட் அல்லது வலைத் தளங்களை வைத்திருக்கின்றன பெரும்பாலான நிறுவனங்களுக்கு அவற்றுக்கே உரித்தான வலைத்தளங்கள் உண்டு. ஆனால் யாகூ கூகுள் போன்றவை வெப் போர்டல்கள்.

போர்டல் என்றால் பல்வேறு வேலைகளையும் சேவைகளையும் பயனாளிகளுக்கு அளிக்கும் ஒரு தளமாகும்.

இணைய தளங்களும் போர்ட்டல்களும் பெரிய நிறுவனங்களுக்கானவை தனிப்பட்ட மனிதர்கள் இணையத்தில் தமது பங்களிப்பை வழங்குவதற்காக உள்ளவை வலைப்பதிவுகள்.

 வலைத் தளங்களுக்கும் வலைப்பதிவுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளில் முக்கியமான ஒன்று  பதிலுரை அல்லது படிப்பவரின் கருத்துக்களை உடனடியாக வழங்குவதற்கான வாய்ப்பு. வலைத் தளங்களில் இத்தகைய வாய்ப்பு வழங்கப் படுவதில்லை.

வலைப் பதிவுகளில் குறைபாடு ஏதும் உள்ளதா என்றால் நிச்சயமாக உள்ளது. கவிதை கதை கட்டுரை அல்லது எழுத்தாளரின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளிப்பவை வலைப்பதிவுகள். நீங்கள் ஒரு பாடகராகவோ நாட்டிய மணியாகவோ சமையல் கலைஞராகவோ இருந்தால் உங்களுக்கு யூடியூப் சேனல் தான் பயன்படும்.

 எழுத்து உங்கள் வழிமுறை ஆனால் வலைப்பதிவு உங்களுக்கு உறுதுணையாகும்.

புதிதாக ஒரு வலைப்பதிவை உருவாக்குவது இப்போதெல்லாம் மிக மிக எளிது.

 கூகுள் நிறுவனத்தின் பிளாக்கர் blogger.com

வேர்டு பிரஸ் wordpress போன்ற இலவச வலைப்பதிவு சேவை வழங்கும் நிறுவனங்கள் பல உள்ளன. அவற்றில் பதிவு செய்து லாகின் செய்து புதிய பிளாக்கை சில வினாடிகளில் தொடங்கி விடலாம்.

உங்களிடம் ஆண்ட்ராய்ட் கைபேசி இருந்தால் நிச்சயமாக கூகுள் கணக்கு இருக்கும். பிளாக்கரில் வலைப்பதிவு தொடங்க அது மட்டும் போதும்.

 கூகுள் அக்கவுண்ட் இல்லை என்றால் புதிதாக பயனாளர் பெயரையும் கடவுச் சொல்லையும் தேர்வு செய்து புதிய கணக்கு ஒன்றை ஆரம்பித்துக் கொள்ளுங்கள்.

 அதன் பிறகு blogger.com சென்று இந்த கூகுள் பயனர்பெயர் பாஸ்வேர்டு உடன் லாகின் செய்யுங்கள் கிரியேட் நியூ பிளாக் என்பதை தொடுங்கள். உங்களது புதிய பிளாக்கிற்கு ஒரு பெயர் address வழங்குங்கள். ஈமெயில் பெயரை போல இந்தப் பெயரும் இதுவரை யாரும் தேர்ந்தெடுக்காத தனிப் பெயராக இருக்க வேண்டும்.  பிளாக்கர் பிளாக்ஸ்பாட் என்ற துணைப் பெயரை வழங்கும் உங்கள் வலைப்பதிவின் முகவரி இப்படி இருக்கும்

nameselected.blogspot.com

முகவரி தேர்ந்தெடுத்த பிறகு பதிவை நீங்கள் தொடங்கலாம். பதிவிற்கு ஒரு தலைப்பை நீங்கள் வழங்கலாம் அதன் பிறகு நீங்கள் எழுதிய எந்தக் கவிதையும் கட்டுரையும் கதையும் போஸ்ட் செய்யலாம்.

 உதாரணமாக எனது வலைப்பதிவின் தலைப்பு  கற்றலின் இனிமை

வலைப்பதிவு முகவரி

achimakan.blogspot.com

வலைப்பதிவின் முகவரியையும் வலைப்பதிவின் தலைப்பையும் ஒரே பெயரில் வைத்திருப்பார்கள் தவறில்லை.

பிறகு நீங்கள் எத்தனை முறை லாகின் செய்தாலும் உங்கள் ப்ளாக் ஓபன் ஆகும் அதில் உங்களது பதிவுகளை நீங்கள் திருத்தம் செய்யலாம் சேர்க்கலாம் அழிக்கலாம். புதிய பதிவுகளை உருவாக்கலாம்.

|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?