<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

8.1.18

எனது சீனப் பயணம் ………….3

சீனப் பணத்தை யுவான் என்று அழைக்கிறார்கள். RMB, CNY என்பதெல்லாம் கூட யுவானையே குறிக்கும் சொற்களாகும். (இந்திய ரூபாயை Rs, INR,  என்றெல்லாம் வழங்குவது போல). பயணக்கட்டணத்தை சுற்றுலா அமைப்பாளர்களிடம் வழங்கிவிட்டாலும் நமது கைச்செலவிற்கு எனச் சிறிது பணத்தை எடுத்துச் செல்ல வேண்டுமல்லவா.

இருபதாயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான ரூபாயை அந்நியப் பணம் மாற்றும் நிறுவனம் மூலம் யுவானாக மாற்றி வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்குக் கடவுச்சீட்டு. பயணச்சீட்டு இரண்டுக்குமான நகல்களையும் வங்கிக் காசோலையும் அளிக்க வேண்டும்.

நான் ஒரு நிறுவனத்திற்குச் சென்று ஒரு யுவான் ரூ10.40 என்ற அளவில் சுமார் 5000 யுவான் வாங்கிக் கொண்டேன். எங்களுடன் பயணம் செய்த ஒருவர் ரூ10.27 என்ற மதிப்பிலும் மற்றொருவர் ரூ10.00 என்ற மதிப்பிலும் மாற்றியிருந்தார்கள்.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட HDFC, ICICI போன்ற வங்கிகளின் பண அட்டை Debit card இருந்தால் போதும். எந்த நாட்டிலும் VISA enable செய்யப்பட்ட ATM களில் உடனடியாகப் அந்த நாட்டுப் பணத்தைப் பெற முடியும். மிகச் சிறிய அளவாக இல்லாமல் கணிசமான தொகையை எடுக்கும் போது சேவைக் கட்டணம் குறைவே. முகவர் மூலமாக இல்லாமல் இவ்வகையில் பண மாற்றம் செய்வதே லாபகரமாக இருக்கும் என்று பிறகு கேள்விப்பட்டேன்.

சீனாவில் பொருட்களை வாங்குவதில் பெரும் இடர்ப்பாடு உள்ளது. மொழி தெரியாதது ஒரு குறை என்றால் ஒவ்வொரு பொருளையும் 7 முதல் 10 மடங்கு அதிக விலை சொல்கிறார்கள். நமக்கு உத்தேச விலை தெரியவில்லை என்றால் ஏமாறவே வாய்ப்பு அதிகம். Super Market போன்ற இடங்களில் மட்டும் ஒரே விலை கறார் விலை விற்கிறார்கள். ஆனால் அங்கே உள்ள பொருட்களின் வகை குறைவு. தேர்வு செய்ய வழியில்லை. பெரும்பாலான கடைகளில் ஆனை விலை குதிரை விலைதான். எனவே சீனப் பொருட்களை நம் ஊரில் நமக்குத் தெரிந்த வியாபாரியிடம் வாங்குவதே நலம் பயக்கும்.

இதனால் கொண்டு சென்ற 5000 யுவானில் 4000 பணமாகவே திருப்பிக் கொண்டுவந்து விட்டேன். அதை மீண்டும் இந்தியப் பணமாக மாற்ற மீண்டும் முகவரிடம் சென்று தரகுக் கட்டணம் வழங்கிய வகையில் இழப்பு மிகுதி.

நாம் வைரக்கற்களை மதிப்பது போல சீனர்கள் Jade என்ற கற்களைப் பெரிதும் மதிக்கிறார்கள். இந்தக் கற்களால் ஆன ஆபரணங்கள் செய்யும் தொழிற்சாலையைப் பார்வையிட்டோம். ஆனால் எதையும் வாங்க முடியவில்லை. வாங்கும் வகையில் விலை இல்லை.


அதே போல் முத்துக்கள் பட்டு போன்றவற்றுக்கான தொழிற்சாலைகளையும் பார்த்து வந்தோம்.
|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?