<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

10.9.05

அறிவியல் கற்பிக்கும் திறஊற்று மென்பொருள்கள் 

இந்த மாத PCQuest இதழின் ஆசிரியர் பகுதியில் கணினி வழி அறிவியல் கற்பிக்கும் திறஊற்று மென்பொருள்கள் (open source software) நான்கினைப் பற்றிக் கூறியுள்ளார்கள்.

கணினி வழி கணினி மொழி கற்பது மட்டுமல்ல அறிவியல் தொழில்நுட்பக் கல்வி அனைத்தும் கற்கலாம்.. கற்பிக்கலாம்.. என்று சொல்லும் ஆசிரியர் அதற்குச் சான்றாக
Stellarium, celestia, google earth, polymol ஆகிய நான்கு மென்பொருள்களை அறிமுகம் செய்துள்ளார் . இவற்றுள் இங்குள்ள PSTN இணைய இணைப்பின் வழி google earth நிறுவுவது இயலவில்லை.

Celestia, Stellarium ஆகியவற்றை google தேடுபொறியின் வழி தேடிய போது எளிதில் கிடைத்தன. முறையே சுமார் 12, 16 MB அளவுள்ள இந்த மென்பொருள்களைப் பதிவிறக்கம் செய்ய முடிந்தது. இவை இரண்டுமே வானவியல் சார்ந்த மென்பொருள்கள். இவற்றுக்கான சுட்டி முறையே
Celestia,
Stellarium

Celestia பற்றிய மேல்விபரங்கள்

இத்தகைய மென்பொருட்களைப் பயன்படுத்திய போது இவ்வளவு காலம் இவை பற்றியெல்லாம் நமக்குத் தெரியாமல் போயிற்றே என்ற எண்ணம் தான் மேலோங்கியது.

இவை போல அறிவியல் கற்பிக்கும் பிற மென்பொருட்கள் ஏதாவது உங்களுக்குத் தெரியுமா? பின்னுாட்டத்தில் சொல்வீர்களா?
|
Comments:
I read over your blog, and i found it inquisitive, you may find My Blog interesting. So please Click Here To Read My Blog

http://pennystockinvestment.blogspot.com
 
திருச்சி வே.ஆனைமுத்து அவர்களால் பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் நூல் மூன்று தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு, 01.07.1974 இல் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் வெளியிடப்பெற்றது. அதன் படிகள் விற்றுத் தீர்ந்தன. பல ஆண்டுகளாக அதன் படிகள் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. உலகு தழுவிய தமிழர்கள் இந்த நூலின் மறுபதிப்பு எப்பொழுது வெளிவரும் என்று ஆர்வமுடன் வினவியவண்ணம் இருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தந்தை பெரியார் பல காலம் எழுதியும் பேசியும் வந்த செய்திகள் உரிய வகையில் தொகுக்கப்பட்டு 2010 பிப்பரவரியில் வெளியிடப்பட உள்ளன. முன் வெளியீட்டுத் திட்டத்தில் இந்த நூல்கள் வெளியிடப்படுவதால் குறைந்த விலையில் வாங்கிக்கொள்ள அரிய வாய்ப்பு. Periyar E.V.R.தெமி 1/ 8 அளவிலான, 20 தொகுதிகளைக் கொண்ட (20 Volumes) இப்பெரும் தொகுப்பு முன்வெளியீட்டுத் திட்டத்தில் மிகவும் குறைந்த விலைக்குக் கிடைக்க உள்ளது. இத்தொகுப்பு உயரிய, அழகிய, தரமான பதிப்பாக அமைகிறது. 100 பக்கங்கள் முதல் 675 பக்கங்கள் வரையிலான தொகுப்புகளாக மொத்தம் 9000 பக்கங்களைக் கொண்டுள்ளது.

பெயர்க்குறிப்பு அடைவு, சொற்குறிப்பு அடைவு, அருஞ்சொற்பொருள் அகராதி, இன்றியமையாத அடிக்குறிப்புகள் தரப்பெற்றுள்ளன. நூலை வெளியிடுவோர் பெரியார் ஈ.வெ.இராமசாமி-நாகம்மை கல்வி,ஆராய்ச்சி அறக்கட்டளையினர் ஆவர்.

20 தொகுதிகளைக்கொண்ட 9000 பக்கம் கொண்டு இந்த நூலின் விற்பனை விலை 5,800 உருவா ஆகும். ஆனால் முன்பதிவுவிலையில் 3500 உருவாவுக்குக் கிடைக்கும்.

முன்பதிவுத் தொகை செலுத்திப் பதிவு செய்துகொள்ள கடைசி நாள் 15.11.2009.

இரண்டு தவணைகளில் முன்பதிவு செய்துகொள்ள விரும்புவோர் முதல் தவணையை (2000 உருவா) 15.11.2009 இலும், இரண்டாம் தவணையை(1800 உருவா) 15.12.2009 இலும் செலுத்தவேண்டும்.

வங்கி வரைவோலையாகத் தொகையை அனுப்ப விரும்புவோர் (Bank Draft) PERIYAR E.V.RAMASAMY-NAGAMMAI EDUCATIONAL AND RESEARCH TRUST என்று ஆங்கிலத்திலோ பெரியார் ஈ.வே,இராமசாமி -நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை எனத் தமிழிலோ வரைவோலை எடுத்து,

திரு.வே.ஆனைமுத்து, தலைவர்

பெரியார்-நாகம்மை அறக்கட்டளை,

19, முருகப்பா தெரு,

சேப்பாக்கம்,சென்னை-600005, இந்தியா

என்னும் முகவரிக்கு அனுப்பலாம்.

தொலைபேசி எண்: + 91 44 2852 2862
 
Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?