<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

9.2.05

பொட்டுவடிவ மின்கலன்கள் ஒன்றரை ரூபாய்க்கு 

கைக்கடிகாரம் ஓடாமல் நின்று போனதால் மின்கலனை மாற்றுவதற்காகக் கடிகாரக் கடைக்குச் சென்றேன். அதற்கான பொட்டுவடிவச் சிறு மின்கலன் 35 ரூபாய் ஆகும் என்றார் கடைக்காரர். தெருவோரம் கடிகாரமே 20 ரூபாய்க்குக் கிடைக்கிறதே மின்கலனுக்கு மட்டும் ஏன் 35 ரூபாய் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். அதெல்லாம் மட்டமான சீனப் பொருட்களாய் இருக்கும். நாங்கள் தருவது உயர்ந்த ஜப்பானிய மின்கலனாக்கும் என்றார்.

பத்து ரூபாய்க்கும் எழுதுகோல் கிடைக்கிறது. நுாறு ரூபாய்க்கும் கிடைக்கிறது. எழுதினால் போதுமல்லவா. இதிலென்ன ஆடம்பரம் வேண்டிக்கிடக்கிறது? மின்கலமோ கடிகாரத்திற்குள் இருப்பது.. இதில் சீனா என்ன ஜப்பான் என்ன என்று நினைத்துக் கொண்டு, உங்களுடைய உயர்ந்த பொருளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து பொட்டு மின்கலன்கள் என்று குறிப்பிட்டு இணையத்தில் தேடிப் பார்த்தேன்.

கைக்கடிகாரங்களிலும் விளையாட்டு சாதனங்களிலும் மின்னணுக் கருவிகளிலும் அதிகமாகப் பயன்படும் சில வகைப் பொட்டு மின்கலங்கள் அவற்றிற்கு இணையாகப் பிற தயாரிப்பாளர்கள் விற்கும் பொட்டு மின்கலங்கள் அவற்றின் தடிம, குறுக்கு அளவுகள் போன்ற பல தகவல்களும் கிடைத்தன. இந்தத் தகவல்களை இங்கே தருகிறேன்: ஒரே வரிசையில் உள்ளவை எல்லாம் சமமான தன்மை உடையவை. கடைசியில் குறிக்கப்பட்டுள்ளது மின்கலத்தின் குறுக்களவும் தடிமனும் மி.மீயில்:
AG series  SR series  D series   GP series  6xx series  Dimensions
     AG1 SR621SW   D364 GP364     602  6.8 X 2.1 
     AG2 SR726SW  D397 GP397     607  7.9 X 2.6 
     AG3 SR736     D392 GP392     LR736 7.9 X 3.6
     AG4 SR626SW  D377 GP377     606  6.8 X 2.6 
     AG5 SR754W   D393 GP393     SR48 7.5 X 5.9 
     AG6 SR920SW  D371 SR69      605  9.5 X 2.1 
     AG7 SR927SW  SR57 GP399     613  9.5 X 2.6 
     AG8 SR1120SW SR55 GP391     609  11.6 X 2.1
     AG9 SR936SW  D394 GP394     625  9.5 X 3.6 
     AG10   SR1130W  D389 SR54 626  11.6 X 3.1
     AG11   SR721SW  D362 SR721    601  7.9 X 2.1 













AG series SR series D series GP series 6xx series Dimensions
AG1 SR621SW D364 GP364 602 6.8 X 2.1
AG2 SR726SW D397 GP397 607 7.9 X 2.6
AG3 SR736 D392 GP392 LR736 7.9 X 3.6
AG4 SR626SW D377 GP377 606 6.8 X 2.6
AG5 SR754W D393 GP393 SR48 7.5 X 5.9
AG6 SR920SW D371 SR69 605 9.5 X 2.1
AG7 SR927SW SR57 GP399 613 9.5 X 2.6
AG8 SR1120SW SR55 GP391 609 11.6 X 2.1
AG9 SR936SW D394 GP394 625 9.5 X 3.6
AG10 SR1130W D389 SR54 626 11.6 X 3.1
AG11 SR721SW D362 SR721 601 7.9 X 2.1


இந்தப் புள்ளி விபரங்களால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கக் கூடும். பொதுவாகக் கடிகாரக்கடைகளில் ஜப்பானிய மாக்செல் போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் SRxxxSW வகை மின்கலங்களைத் தான் பயன்படுத்துகிறார்கள். இவைதான் தனியாக வாங்கினால் 25.. 35 ரூபாய்களுக்கும் பத்து உள்ள தொகுப்பாக மொத்த விலையில் வாங்கினால் சுமார் 10 ரூபாய்க்கும் கிடைக்கின்றன.

ஆனால் AGxx வகை மின்கலங்கள் விலை மிகமிக மலிவானவை. AG1 மின்கலம் ஒன்று மதுரையில் ஒன்றரை ரூபாய் மட்டுமே. அதே சில்வர் ஆக்சைடுதான் இதிலும் பயன்படுத்தப்படும் வேதியல் பொருள்.

எனவே இணையான மின்கலன் பற்றிய தகவல் குறைந்த செலவில் கடிகாரங்கள். கணக்கிகள் போன்றவற்றைப் பயன்படுத்த நமக்குத் துணை புரியக் கூடும்.
|
Comments:
பொட்டு மின்கலம் - பட்டுன்னு சொல்லிட்டிங்க! வாழ்க! உங்களைப் போன்றவர்களால் தமிழ் வாழும்.

அன்புடன்,
இராம.கி.
 
நானும் நினைத்தேன். பொட்டு மின்கலம் ஒரு நல்ல வார்த்தை. நன்றி. மின்கலத்தைவிட உங்கள் வார்த்தை சக்தி வாய்ந்ததாக இருக்கிறது!
 
ஆச்சிமகன், நல்ல தமிழ்ச்சொல். நல்ல கட்டுரையும் கூட. இங்கும் கூட மின்கலம் வாங்கச் செல்லும் போது எது குறைந்த விலை என்று பார்ப்பது வழக்கம். மற்றபடி பெரிய நிறுவனம் (அ) வெளிநாட்டுப் பொருள் என்பதற்காக அதே பணியினைச் செய்யும் ஒன்றிற்கு அதிக விலை எதற்குக் கொடுக்க வேண்டும் ?
 
ஆச்சிமகன், நல்ல தமிழ்ச்சொல். நல்ல கட்டுரையும் கூட. இங்கும் கூட மின்கலம் வாங்கச் செல்லும் போது எது குறைந்த விலை என்று பார்ப்பது வழக்கம். மற்றபடி பெரிய நிறுவனம் (அ) வெளிநாட்டுப் பொருள் என்பதற்காக அதே பணியினைச் செய்யும் ஒன்றிற்கு அதிக விலை எதற்குக் கொடுக்க வேண்டும் ?
 
தங்கள் அனைவரது கருத்துக்களுக்கும் நன்றி.
 
Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?