<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

12.11.04

மருத்துவரிடம் செல்லலாமா.. வேண்டாமா? 

காலை எழுந்ததும் எங்காவது வலி இருப்பது தெரிகிறது. முதுகில் மூட்டில் கழுத்தில் அல்லது கைகளில். என்ன செய்வது? உடனே மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறலாமா இல்லை சற்று பொறுத்திருந்து பார்த்துக் கொள்ளலாமா?

இதற்கெல்லாம் என் நண்பர் அனந்தசயனன் சொன்ன வழியைத்தான் பல ஆண்டுகளாக நான் பின்பற்றி வருகிறேன்.

அழுத்தம் கொடுக்கும் போது (அசைக்கும் போது, திருப்பும் போது) மட்டும் வலி இருந்தால் கவலை இல்லை. விட்டு விடுங்கள். வலி தானாக சரியாகிவிடும்.

ஒன்றும் செய்யாமல் இருக்கும் போதே வலித்தால். சற்று கவனிக்க வேண்டும். சூடான அல்லது குளிர்ந்த ஒத்தடம் கொடுக்கலாம். ஏதாவது வலி நீக்கும் மருந்துகளைப் âசலாம். வலி பொறுக்க முடியாமல் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

நாற்பதை நெருங்கும் பலரும் கண் பார்வைக் கோளாறில் தொடங்கி இரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு என்ற பல நோய்களுக்கு ஆளாகி, மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவதையும் உணவை விட அதிகமாக மருந்து மாத்திரைகளை உட்கொள்வதையும் அன்றாடம் காண்கிறோம்.

உடற்பயிற்சி இன்மைதான் இதற்கான ஒரே காரணம். பல் தேய்ப்பதும் குளிப்பதும் உடை உடுத்துவதும் உண்பதும் போல உடற்பயிற்சியும் நம் அன்றாடக் கடமைகளுள் ஒன்றாக வேண்டும். இதில் ஆண் பெண் வேறுபாடுகள் ஏதுமில்லை.

சோம்பேறியாக இருந்து கொண்டு, நேரமின்மை என்று காரணம் காட்டி, உடற்பயிற்சி செய்யாமல் தப்பித்து விடுபவர்கள் தான் மிகுதி.

நோய் தொற்றிக் கொண்ட பிறகு தினமும் ஊசி போட்டுக்கொள்ளவும் மாத்திரைகள் என்ற நச்சுப் பொருட்களை உண்பதற்கும் யாரும் மறுப்பு சொல்வதில்லை என்பதுதான் வேடிக்கை.

நல்ல குரு ஒருவரிடம் முறைப்படி எளிய யோகாசனங்களைக் கற்றுக் கொள்ளலாம். குறைந்தது சூரிய வழிபாடு என்ற யோகாசனப் பயிற்சியையாவது கற்றுக் கொண்டு தினமும் செய்யலாம். அதுவும் முடியாதவர்கள் பள்ளியில் கற்றுக் கொண்ட உடற்பயிற்சிகளை நினைவு கூர்ந்து செய்யலாம்.

உடலின் அத்தனை உறுப்புக்களையும் ஈடுபடுத்தும் வகையில் உடற்பயிற்சி அமைய வேண்டும்.

காலாற நடப்பதை மட்டும் செய்தால் அது பொழுது போக்கு. உடற்பயிற்சியா என்று தெரியவில்லை.

தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டியதே இல்லை.
|
Comments:
உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று உருப்படியான விஷயம் தான் சொல்லி இருக்கிறீர்கள். ஆனாலும் பல சாக்குகளும் சோம்பலும் சேர்ந்து உ.ப.கூடம் செல்ல முடியாமலே போகிற ஒரு நோய்க்கு என்ன மருந்து இருக்கிறது :-) ?
 
நான் தினமும் அதிகாலையில் அரைமணி நேரம் எளிய உடற்பயிற்சிகள் செய்கிறேன். வார இறுதியில் ஓட்டப் பழக்கமும் உண்டு.

எளிய உடற்பயிற்சியும், சரியான உணவுப் பழக்கவழக்கங்களும், பழங்களும் காய்கறிகளும் ஆரோக்கிய வாழ்வுக்கு முக்கியம்.
 
எனக்கு சின்ன வயசிலிருந்தே அப்பா பழக்கிய பழக்கம்.
முன்னர் தினமும் ஒரு மணி நேரம் எளிமையான உடற்பயிற்சிகள் செய்தேன்.
தற்போது அரைமணி நேரம்தான். ஆனாலும் தொடர்கிறேன்.
 
செல்வராஜ் நீங்கள் உடற்பயிற்சிக் கூடம் எதற்கும் செல்ல வேண்டியதே இல்லை.

காலையில் பத்து அல்லது இருபது முறை உட்கார்ந்து எழுங்கள்.. (பிள்ளையாருக்கு முன் தோப்புக் கரணம் போடுவது போல). இதை பஸ்கி என்கிறார்கள். தண்டால் என்பது கைகளைத் தரையில் ஊன்றிக் குனிந்து எழுவது. யாரிடம் இருந்தாவது கற்றுக் கொள்ளலாம். இவ்விரண்டும் கூடப் போதுமானதே.

இணையத்தில் யோகாசனம் கற்றுக் கொடுக்கும் தளங்கள் பல உள்ளன. கூகிளில் தேடிப் பார்க்கலாம். இந்தியாவில், யோகாசனம் உடற்பயிற்சிகள் பற்றி நிறைய நூல்கள் கிடைக்கின்றன.

எளிய பயிற்சி முறைகள் எதையாவது கற்றுக் கொண்டு தினம் 20, 30 நிமிடங்கள் செய்தால் கூடப் போதும்.

மூர்த்தி, சந்திரவதனா கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
 
காலையில் எழுந்து கணிப்பொறியைத் திறக்காமல் இருக்கும் நாட்களில் எல்லாம் அனேகமாக உடற்பயிற்சி செய்து விடுவேன்! இதுல ஒக்காந்தா ப்ரஷர், தொந்தியெல்லாம் வராம என்ன செய்யும்?:)
 
தங்கள் வருகைக்கு நன்றி சுந்தர வடிவேல்.

தினமும் காலை எட்டு மணி வரை இங்கே இணையத் தொடர்பு குறைந்த கட்டணத்தில் கிடைப்பதால், காலை எழுந்ததும் கணினியைத் தான் திறப்பேன். ஆனால் எட்டுக்குப் பிறகு அரை மணி நேரமாவது எளிய உடற்பயிற்சிகளாவது செய்தே ஆக வேண்டும். அப்படியொரு பழக்கத்துக்கு அடிமையாகிப் பல காலமாகிறது.
 
நான் தினமும் 50 தண்டால்கள் வரை பயிற்சி செய்து வருகிறேன்
 
Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?