<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

8.11.04

முட்டை சைவமா அசைவமா? 

இது பலரும் அடிக்கடி கேட்கும் கேள்வி.

இதற்கு ஒரு வரியில் பதில் சொல்வதானால் இப்படிச் சொல்லலாம்: :
பண்ணைக் கோழி முட்டை சைவம்.. நாட்டுக் கோழி முட்டை அசைவம்

அல்லது இப்படியும் சொல்லலாம்: :
கருவுற்ற முட்டை அசைவம்.. கருவுறாத முட்டை சைவம்.

இவையெல்லாம் பதில்களாய் இருந்தாலும் தெளிவான பதில்களாய் இல்லை என்று தோன்றுகிறது. தெளிவான பதில் வேண்டுமானால் கொஞ்சம் உயிரியல் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். பரிமாண வளர்ச்சி.. ஓரறிவு உயிர் என்றெல்லாம் தொடங்கி உங்களுக்குப் பயம் காட்ட மாட்டேன். சுருக்கமாகவே பார்க்கலாம். பொதுவாக உயரின உயிர்களை முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பன (பறவைகள்) என்றும் குட்டி போட்டுப் பால் கொடுப்பன (விலங்குகள்) என்றும் நமக்குத் தெரியும்..

குட்டி போட்டுப் பால் கொடுக்கும் விலங்கினத்தில், உரிய பருவ வயதை அடைந்ததும் பெண்பால் விலங்கின் உடலில், கரு முட்டைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. இந்த முட்டைகள் சில நாட்கள் கருப்பையில் தங்கி இருக்கும். அந்தக் காலக் கட்டத்திற்குள் கருமுட்டைகள் ஆண் உயிரணுவால் கருவடையச் செய்யப்படுமானால், கருப்பையில் சிறிய உயிர் ஒன்று வளர ஆரம்பிக்கிறது. இல்லையென்றால் கருமுட்டை அழுகி வெளியேறுகிறது. புதிய கரு முட்டை தோன்றுகிறது. இந்தச் சுழற்சி ஒரு தொடர்கதையாகிறது. இதில் நாம் நமது வினாவைப் புரிந்து கொள்ள நமக்குத் தெரிய வேண்டியது இதுதான்: சரியான பருவம் அடைந்ததும் முட்டைகள் உருவாகின்றன. முட்டைகள் கருவுறத்தான் ஆண் உயிரணு தேவையே தவிர முட்டை உருவாக அவை தேவையில்லை.

இப்போது முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைப் பார்ப்போம்: இவையும் உரிய பருவ வயதை அடைந்ததும் முட்டைகள் உருவாகின்றன. ஆனால் அந்த முட்டைகள் உருவாகும் போதே ஆண் உயிரணுவால் அவை கருவுறுமானால் பறவை முட்டையிட்ட பிறகு அந்த முட்டைக்குள்ளே ஒரு சிற்றுயிர், (பறவையின் உடலுக்கு வெளியே) வளரத் தொடங்குகிறது. அதன் வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் முன்னதாகவே தாய்ப் பறவையால் இந்த முட்டைக்குள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. பறவை உரிய வெப்பநிலையை மட்டும் அளித்து (அடைகாத்து) குஞ்சு பொரிக்கிறது.. கருவுறாத முட்டையோ அழுகும். அந்த முட்டையில் வளரும் உயிரணு ஏதும் இல்லை. நாம் உண்டாலும் உண்ணாவிட்டாலும் அவை வீணாகும். பாலை சைவம் என்றால் இந்த முட்டையும் சைவம் தான்.

பண்ணை முட்டைகள் தனித்தனிக் கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள கோழிகளால் இடப்படுகின்றன. முட்டைகள் கருவுறுமானால் ஒவ்வொரு கோழியும் இடும் முட்டைகளின் எண்ணிக்கை குறையும் என்பதால் அவற்றைத் தனித்தனியாக அடைத்து வைத்து முட்டையிட மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். (மனிதன் தனது சுயநலனுக்காக இயற்கைக்கு இழைத்த எத்தனையோ கொடுமைகளில் இதுவும் ஒன்று.) இந்தப் பண்ணை முட்டைகள் எல்லாமே கருவுறாத சைவ முட்டைகள் தான்.

|
Comments:
//கருவுற்ற முட்டை அசைவம்.. கருவுறாத முட்டை சைவம்//

கோழி ஒரு தரம் மாசமாகி..அப்றம் முட்டை ஒரு தரம் மாசமாகி...என்னப்பா இது? முட்டை அசைவம்தான். உடல்நலம் பேண சத்துக்காக சாப்பிட ஆசைப்பட்ட சில "அவா" அதனை சைவமாக்கிவிட்டனர். இப்போது நாட்டுக்கோழி முட்டைகள் சாப்பிட ஆசைப்படுவது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போன்றது. பிராய்லர் முட்டையில் சத்து எங்கே...சும்மா வெறும் பருக்கையை சாப்பிடாமல் "கடி"ச்சிக்கலாம்!
 
ஆச்சி மகன் அவர்களே,
மிக அருமையான விளக்கம்.

சைவம்,அசைவம் பற்றி எனது கருத்து.
".. Whatever derived from Animal is Non-Vegetarian Stuff, and anything drived from a Plant is Vegetarian Stuff..."

இந்த வகையில் குட்டிபோட்டுப் பாலூட்டும் வகையைச் சார்ந்த எந்த விலங்கினமும், மனிதன் உட்பட சைவம் அல்ல.
 
ஆச்சிமகன்
பண்ணையில் இருப்பது சைவமுட்டையா? ஐயையோ இதுவரை தெரியாமல் போயிற்றே.
தகவலுக்கு நன்றி.
நிறையத்தான் தெரிஞ்சு வைச்சிருக்கிறீங்கள்
indrany | 01.16.05 - 10:47 pm | #
 
Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?