சுட்டிகள்
தொடர்புக்கு
முந்தைய பதிவுகள்
கருவூலம்
"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.
8.11.04
முட்டை அறிவியல்
எல்லாமே முட்டையில் தான் தொடங்குகிறது அல்லவா?
பண்டிகைக் காலமாகிய இந்த வாரத்தையும் முட்டையில் தொடங்குகிறேன்.
முட்டை பற்றி எல்லோருக்கும் தெரிந்த ஒரு அறிவியல் வினா:
வெந்த முட்டையா வேகாத முட்டையா?
உங்களிடம் இரண்டு முட்டைகள் தரப்படுகின்றன. பார்ப்பதற்கு ஒரே போல் தோற்றமளிக்கும் இவற்றுள் ஒன்று வேக வைக்கப் பட்டு ஆற வைக்கப்பட்டது. மற்றது வேகாத (பச்சை?) முட்டை. முட்டைகளை உடைக்காமல், எது வெந்தது எது வேகாதது என்று சொல்ல முடியுமா?
இது மிகவும் சுலபம். வெந்த முட்டை முழுவதும் திடப்பொருளாக மாறி விடுகிறது. வேகாத முட்டை உட்புறம் திரவ வடிவில் உள்ளது. இரண்டையும் தரையில் அல்லது ஒரு தட்டில் வைத்துச் சுழற்றினால், வேகாத முட்டை விரைவில் நின்று விடும், ஏனெனில் உட்புறமுள்ள திரவம் சுழற்சிக்கு மிகுந்த தடையை ஏற்படுத்துகிறது. அது உள்ளே மறுபுறமாகச் சுழல்கிறது. எனவே சுழற்சி விரைவில் நின்று விடுகிறது,. ஆனால் வெந்த முட்டை அதிக நேரம் சுழன்று கொண்டேயிருக்கும். இதிலிருந்து முட்டை வெந்த முட்டையா அல்லது வேகாத முட்டையா என்று எளிதில் பிரித்தரியலாம்.
|

Comments:
ஆஹா இப்படில்லாம் விஞ்ஞானம் இருக்குதா? ஊர்ல அம்மா ஏதோ பார்ப்பாங்க நல்லமுட்டை, அழுகியமுட்டை என்று பார்க்க தண்ணில போட்டா பின்பக்கம் தூக்குமோ எதுவோ...!?
அதுசரி, அவித்த முட்டை எத்தனை நாளைக்கு வைத்திருக்கலாம். இங்கு சீனர்களிடம், ஒரு குழந்தை பிறந்து பார்க்க வந்தவர்களுக்கு மறுஅன்பளிப்பாக அல்லது நெருங்கிய/அலுவலக நண்பர்களுக்கு பேருகால விடுப்புக்குப் பின் அலுவலகம் வரும் முதல் நாளில் தனித்தனியாக ஒரு கேக்(குடன்) பெட்டி கொடுப்பார்கள். அதில் நாலு மூலையிலும் தோடில் சிகப்பு வண்ணம் பூசிய அவித்த முட்டையிருக்கும். அது எப்போது தயாரித்தது என்று தெரியாததலும், அதுஎன்ன சிவப்பு வண்ணம் என்பதாலும் - பெரும்பாலும் சாப்பிட்டதில்லை...

நன்றி அன்பு, மூர்த்தி.
பொதுவாக சமைத்த எல்லா உணவுகளையும் போல வேகவைத்த முட்டையையும் சில மணி நேரங்களுக்குள் சாப்பிட வேண்டும்.
கருவுற்ற பிறகுதான் ஆணா பெண்ணா போன்ற கேள்விகள் எல்லாம். பண்ணை முட்டையில் ஒரு பேதமும் இல்லை. குரோமோசோம்கள் x, y பற்றி எல்லாம் படித்திருக்கிறோம் தானே!
Post a Comment