<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

2.10.04

வன்பொருள் நிறுவனங்களின் மோசடி 

கணினியும் வன்பொருட்களும் நம்ப முடியாத அளவு விலை மலிந்து விட்டன. 1994ல் சுமார் ரூ. 60,000 செலவிட்டு 486 வகை கணினி ஒன்றை வாங்கினேன். 4MB நினைவகமும் 540MB வன்தகடும் வண்ணக் காட்சித்திரையும் கொண்டிருந்த அந்தக் கணினியில் ஓராண்டு கழித்து நினைவகத்தை 4MB கூட்டுவதற்காக சுமார் ரூ. 5400 மேலும் செலவிட்டேன். 1998 - 99ல் இந்தியாவில் பட்டிதொட்டியெங்கும் இணையம் அறிமுகமான போது இணையத் தொடர்புக் கருவிகளுக்காகப் பல ஆயிரங்கள் செலவிட்டேன்.

இன்றைய நிலையில் மிக உயர்ந்த செயல்திறனுடைய P4 கணினியையே ரூ. 20 முதல் ரூ. 25 ஆயிரங்களுக்குள் வடிவமைக்க முடியும் (256MB உயர்வேக நினைவகம் ரூ. 2000 மட்டுமே) என்பதை நோக்கும் போது அப்போது செலவிட்டதெல்லாம் மிகவும் மனச்சோர்வு அளிக்கக் கூடும்.. கணினியின் பயனால் கற்றதையும் பெற்றதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால்.

இன்றைக்குப் புதிதாக ஒரு கணினி வாங்கி XP பயன்படுத்துவதைவிட DOSல் தொடங்கி Windows 3.1, 95, 98, 98SE, 2000, XP.. அத்துடன் Linux என்ற வகையில் மென்பொருள் வளர்ச்சியுடன் இணைந்து வளர்ந்ததால் கணினிப் பயன்பாட்டின் ஆழமும் முழுமையும் உணர முடிகிறது.

ஆனால் உலகளாவிய வன்பொருள் தயாரிப்பாளர்கள் இந்தியாவிற்கு எத்தகைய இடமளித்துள்ளார்கள் என்று எண்ணும் போது தான் மிகுந்த மனக்குமுறல் ஏற்படுகிறது. பெரும்பாலும் உலகச் சந்தையில் ஒதுக்கப்பட்ட.. கைவிடப்பட்ட வன்பொருட்கள் இந்தியச் சந்தையில் குவிக்கப்படுவதாகப் பல நேரங்களில் கூக்குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

கணினியின் ஆதாரமான செயலாக்கிகளும் (Processors) மூலத்தகடுகளும் (Motherboards) வண்ணத்திரைகளும் (Monitors) குறுந்தகடுகளும் அவற்றைப் படிக்கும், எழுதும் பொறிகளும் (CD. DVD, drives and writers) பெரும்பகுதியான தயாரிப்பாளர்களால் உலகெங்கும் விற்கப்படும் விலையிலேயே இங்கும் விற்கப்படுகின்றன. Intel, Asus, Samsung போன்ற நிறுவனங்களை இந்த வகையில் குறிப்பிடலாம்.

மிகக் கூர்ந்து கவனித்தால் பிற நாடுகளில் விற்கப்படும் பொருட்களை விடச் சற்று தரம் அல்லது தகுதி குறைந்தவையே இந்தியச் சந்தையில் உலகளாவிய விலைக்கு விற்கப்படுவதைக் கண்டறியலாம். உதாரணமாக Intel 865GBF என்ற மூலத்தகடு இந்தியாவிலும் உலகம் முழுதும் ஒரே விலையில்தான் விற்கப்படுகின்றது. ஆனால் இந்தியாவில் விற்கப்படும் தகட்டில் LAN வசதி கிடையாது. இந்த வேறுபாடுகளை எல்லாம் நுணுகி ஆய்ந்து வெளிப்படுத்தும் தகவல் தளங்கள் உள்ளதா என்றும் தெரியவில்லை.

நவீன புகைப்படக் கருவிகள், 2/3 பரிமாண விளையாட்டுக்களுக்கான தகடுகள் போன்றவை உலகளாவிய விலை போலப் பல மடங்கு விலைக்கு விற்கப்படுகின்றன அல்லது உலகத் தரம் வாய்ந்த வன்பொருட்கள் இங்கே கிடைப்பதேயில்லை என்று சொல்லலாம்.

உதாரணமாக மிகச் சிறந்த புகைப்படக் கருவிகளான Canon Powershot A80, G3, G5 போன்றவை எனக்குத் தெரிந்தவரை இந்தியச் சந்தைக்கு வரவேயில்லை. இந்தியாவில் கிடைக்கும் Sony DSC P52, P72 போன்றவை பிற நாடுகளில் விற்கப்படுவதைப் போல மூன்று மடங்கு விலைக்குக் கிடைக்கின்றன.

விலை ஒருபுறம் இருக்க இங்கே இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவைதான் ஆத்திரமூட்டுவதாய் உள்ளது. எனது அனுபவங்கள் இரண்டை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

Canon 210 Bubblejet printer ஒன்றை வைத்திருந்தேன். (1995ல் அதன் விலை ரூ. 11500 இப்போது அதைவிடத் தரம் உயர்ந்த வகையிலான Canon Bubblejet printer ரூ. 3000க்கும் கீழே). இங்குள்ள மின்னழுத்த ஏற்றத் தாழ்வுகளால் அதன் Powersupply எரிந்து போய் விட்டது. மதுரையிலும் சென்னையிலும் தேடி விசாரித்த போது அந்த Powersupply விலை ரூ. 1500 என்று சொன்னார்கள். அச்சியந்திரம் முழுவதுமோ அப்போது ரூ. 4000க்குள் தான் விற்கப்பட்டது. ரூ. 1500 கொடுத்து அதை வாங்க விரும்பாமல் நானே ரூ.160 செலவில் Powersupply ஒன்றைச் செய்து கொண்டேன். அது சிறப்பாகச் செயலாற்றியது. மின்னணுவியல் குறித்தான அறிவற்ற எளிய இந்தியப் பயனாளி என்ன செய்வார்?

ஒரு வன்பொருளை வாங்கிவிட்டால் அதற்கான உதிரிப் பாகங்கள் அனைத்தும்.. மை போன்ற செலவிடும் பொருட்கள் அனைத்தும்.. அதே நிறுவனத்தில் தான் வாங்கியாக வேண்டும். இந்த நிறுவனங்கள் இவற்றில் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன.

இதுமட்டுமில்லை இந்த வன்பொருட்கள் பழுதுபட்டால் இவற்றின் விலையில் பாதிக்கும் மேல் நாம் இவர்களிடம் அழ வேண்டும். பொதுவாகப் பழுதகற்றல் என்பதே இவர்களைப் பொருத்தவரை உள்ளார்ந்த பாகங்களை மாற்றுதல்தான். பழுது பார்த்துப் பயன்படுத்தக் கூடாது புதிதாக வாங்க வேண்டும் என்பது உலகளாவிய சிந்தனையாக இருக்கலாம். நமது பொருளாதார வசதி அதற்கு இடம் தராத போது இந்த நிறுவனங்கள் இந்தியருக்கு ஏற்ற பழுதகற்றும் சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்க வேண்டும். ஆனால் இவை நம்மை ஏமாற்றிக் கொள்ளை அடிக்கின்றன.

2000ல் HP 6L Laserjet அச்சியந்திரம் ஒன்றை ரூ. 22500க்கு வாங்கினேன். சுமார் 2 ஆண்டுகாலம் எந்தத் தொல்லையும் தராமல் வேலை செய்தது. அதன்பிறகு ஒரு ஆயுத âசை நாளில் ஈரத்துணி ஒன்றால் அதன் உட்புறம் இருந்த கருநிற உருளை ஒன்றை சுத்தம் செய்யப் போக வந்தது வினை. அதற்குப் பிறகு அச்சிட்ட எல்லாத் தாள்களும் மிக மங்கலாகத் தெளிவற்று அச்சாயின. தவறை உணர்ந்து அந்த உருளையை மட்டும் மாற்றித் தாருங்கள் என்று மதுரையில் உள்ள ஒரு பிரபல கணினி சேவை நிறுவனத்திடம் கேட்டேன். அவர்கள் பல மாதங்கள் முயன்றும் அந்த உருளையை மட்டும் வாங்க முடியவில்லை என்று சொல்லிவிட்டார்கள். இதன் விலை முதலியவற்றை விசாரித்து நான் டெல்லியிலும் சென்னையிலும் இருந்த HP நிறுவனத்திற்கு அனுப்பிய எந்த மின்னஞ்சலுக்கும் பதில் வரவில்லை.

பிறகு சென்னையில் உள்ள HP Service Centreக்கு அதனை எடுத்துச் சென்று அந்த உருளையை மட்டும் மாற்றித் தாருங்கள் என்று கேட்டேன். அவர்கள் உருளையுடன் வேறு சில முக்கிய பாகங்களையும் மாற்றினால் தான் அச்சியந்திரம் வேலை செய்யும்.. மொத்தமாக சுமார் ரூ.10500 செலவாகும் என்று சொன்னார்கள். அப்போது புதிய அச்சியந்திரம் ஒன்றின் விலையே ரூ.16500 என்பதால் நான் புதிய அச்சியந்திரம் ஒன்றையே வாங்கிவிட்டேன்.

அதன்பிறகு இணையத்தில் தேடிய போது www.printerworks.com போன்ற தளங்களில் இந்த அச்சியந்திரத்தின் மின்சுற்றுக்கள், பாகங்களின் எண், விலை போன்ற அனைத்தும் தெரியவந்தது. இவற்றைக் குறிப்பிட்டு எழுதியபோது அமெரிக்காவிலும் சிங்கப்âரிலும் உள்ள நண்பர்கள் இந்த பாகங்களை எளிதாக வாங்க முடியும் என்று சொன்னார்கள். வாங்கியும் அனுப்பினார்கள். நானே அதனை மாற்றி சிறப்பாக வேலை செய்ய வைத்தேன்.

பிற நாடுகளில் சிறுபாகங்களைக் கூட விற்கும் இந்த வன்பொருள் நிறுவனங்கள் இந்தியாவில் ஏன் விற்பதில்லை?

தகவல் தொழில் நுட்பம் இவ்வளவு விரிவான இந்த நாட்களிலும் இவர்கள் நாட்டுக்கொரு வேடம் âண்டால் இவர்களது சாயம் வெளுக்க நீண்ட நாட்கள் ஆகாது.


|
Comments:
மிக முக்கியமான பதிவு. அதிலும் இதுபோன்ற உபரிகளை இறக்குமதி செய்துவிற்கும் ஒருசில நிறுவனங்களும் கூட கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். சமூக அக்கறையுடன் ஒரு பதிவு, நன்றி.

அதை விட, அவ்ளோ காசு செலவுசெய்து அச்சியந்திரமெல்லாம் வீட்டிலேயே வைத்திருக்கின்றீர்களா? அதிசயமாயிருக்கிறது (HP 6L).
 
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பு.

காட்சித் திரையில் படிக்கும் எந்த நல்ல தகவலையும் தாளில் அச்சிட்டு வைத்துக் கொள்வதும் அதை (கணினி வசதி இல்லாத) நண்பர்களுக்கு அனுப்புவதும் என் வழக்கம். அதற்கு அச்சியந்திரம் தவிர்க்க முடியாத தேவை அல்லவா?
 
அமெரிக்காவில் பழுதானதைச் சீராக்கும் காசுக்குப் புதுசாய் வாங்கிவிடலாம் என்பது பரவலான கருத்து. ஏன்னா சீராக்கும் செலவு (மனிதக்கூலி) எக்கச்சக்கம். அதோட நல்லா ஆனா ஆகும், இல்லன்னா அந்தக் காசும் போயி கழுத்து வலி போயி திருகுவலி வந்த கதையாயிரும். பரவால்ல பொறுமைசாலியா இருக்கீங்க!
 
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுந்தர்.

இங்கும் பல மின்னணுவியல் பொருட்களின் விலை மலிந்து வருவதால் பழுதகற்றலை விடப் புதிதாக வாங்குவது நல்லது என்ற எண்ணம் பரவலாகி வருகிறது. உதாரணமாக கடிகாரங்கள். புதியனவற்றின் விலை மிக மிக மலிவு.
 
Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?