<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

18.5.04

வாழ்வாங்கு வாழ 

வாழ்க்கையைப் பற்றி எத்தனை எத்தனை சிந்தனைகள்!
நல்ல வாழ்விற்கு வழிகாட்டும் எண்ணற்ற வழிமுறைகள்!

ஆயினும் மானுட வாழ்வென்பது அவலம் மிகுந்ததாகவே ஆனதை என் சொல்ல?

வாழ்வென்பது என்ன?

மூச்சுவிடுதல் மட்டுமா?

உண்ணுதலையும் உறங்குதலையும் சேர்த்துக் கொண்டால் போதுமா?

இரை தேடுதலையும் நாளைக்கெனப் பொருள் குவிப்பதையும் வாழ்வின் கூடுதல் தேவைகளாகக் கொள்ளலாமா?

அவை மட்டும் போதுமா இல்லை அன்பு காட்டுதலும் தன்பால் காட்டப்படும் அன்பை ஏற்றுக் கொள்ளுதலும் வாழ்வின் பகுதிகளாகுமா?

கவிதையும் இலக்கியமும் இசையும் ஓவியமும் இன்னபிற கலைகளும் வாழ்க்கைக்குத் தேவையா இல்லையா?

தேடல் என்பது என்ன?
வாழ்வில் தேடலின் பங்களிப்பு என்ன?

தோன்றில் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலில் தோன்றாமை நன்று.. என்றும்

மாபெரும் சபைகளில் நீநடந்தால் உனக்கு
மாலைகள் விழவேண்டும் ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவன் என்று
போற்றிப் புகழ வேண்டும்.. .. .. என்றும்

புகழின் பெருமையைப் பாடிச்சென்றார்களே..
வாழ்க்கைக்கு அந்தப் புகழால் என்ன பயன்?

புகழ் பெற்று வாழ்ந்தவர்கள் எதைக் கொண்டு சென்றார்கள்? இல்லை அவர்கள் சென்ற பிறகு அவர்கள் சேர்த்த புகழால் அவர்களுக்குப் பயன் என்ன?

பேரும்புகழுமற்று நீரோடையையாய் வாழ்ந்தவர்கள் இழந்து நின்றதென்ன?

“பிறப்பிற்கு முன்பு ஏதுமில்லை;
இறப்பிற்குப் பின்பு ஏதுமிருக்கப் போவதில்லை;”
(Before birth it was nothing; after death it will be nothing.)
என்றும்

“வாழ்வென்பது கல்லறையை நோக்கிய நெடும்பயணம்”
(When a child is born it begins to march towards its graveyard)
என்றும் சொல்லப்பட்டவை எத்தனை சத்திய வார்த்தைகள்!

கல்லறை கீதம் பாடிச் சென்றானே தாமஸ் கிரே (“Elegy written in a country chuch yard” by Thomas Gray) அவன் சொன்னது போல காட்டுப்âக்களாய் மலர்ந்து மறைந்தால் என்ன தவறு? புகழடைவதற்காகப் பலரது உழைப்பையும் உதிரத்தையும் உறிஞ்சிப் பிறர் வாழ்வில் முள்ளாய் உறுத்துதல் தகுமோ?


வல்லமை தாராயோ இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே..
.. .. .. .. .. .. .. .. .. .. .. ..
நசையறு மனம் கேட்டேன்; நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்;
- பாரதியார்

அந்த மகாகவியைப் போலவே, “எனது மரணப்படுக்கையில், நான் வாழ்ந்ததால் இந்த உலகு முன்னிலும் சற்று மேம்பட்டது என்ற உளப்âர்வமான எண்ணம் தோன்றுமானால் அதுவே என் வாழ்வின் பயனாகக் கருதுவேன்” என்று சொன்னானே ஐசக் அசிமோவ் அது எத்தனை உயர்ந்த சிந்தனை!

நல்ல எண்ணங்கள் உள்ளத்தில் எப்போதும் தோன்றுமானால் அதுவே நல்ல வாழ்வு என்றார் அப்பர்:

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவில்லை...
- தேவாரம்

பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சிறுமிதவை போல வாழ்க்கை மூத்தோர் வகுத்த வழியில் செல்லும் என்பது கணியன் âங்குன்றனின் கருத்து:

யாதும் ஊரே யாவரும் கேளிர்..
.. .. .. .. .. .. .. .. .. .. .. ..
நீர்வழிப் படும்புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படும்என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் .. .. .. .. .. ..
- புறநானுாறு

ஒரு சின்னஞ்சிறு ஆலவிதைக்குள் அந்த ஆலமரத்தின் நுாற்றாண்டு வாழ்விற்கான வழித்திட்டங்களையும், பல்லாயிரம் ஆண்டுகால ஆலமரங்களின் வரலாற்றையும் (மரபியலை) இயற்கை பொதிந்து வைத்துள்ளது. இந்த அற்புதத்தை அல்லவா “ஆருயிர் முறைவழிப்படும்” என்ற வரியில் சொல்லிவிட்டார்!

ஆலுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் இது பொருந்தும் தானே. பிறந்த குழந்தை பாலருந்த எங்கே கற்றது? பல்லாயிரம் ஆண்டுகால மனிதர் உயிர்வாழ்ந்த வரலாறு முழுமையும் நம் உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது அல்லவா?

இதைத் தான் உளவியலறிஞர்கள் கூட்டு உணர்வு மயக்க ஆழ்மனம் என்றெல்லாம் கூறுகிறார்கள் (Collective unconscious) பாம்பைப் பற்றிய பயம் .. இதுவரை கண்டறியாத காட்சிகள் கனவுநிலையில் வெளிப்படல் .. இவை எல்லாம் ஆழ்மனப் பதிவின் வெளிப்பாடுகள்.

இயற்கை அதன் பங்கிற்கு மரபைப் பதிவு செய்தால், மனிதன் தன் கடமைக்கு வாழும் முறைகளைக் குழந்தைக்கு கற்பிக்கிறான். மனப்பதிவும் நடைமுறை வாழ்வும் ஒத்தமையும் போது அக்குழந்தையின் வாழ்வு தெளிந்த நீரோடை போலாகிறது. சிக்கலற்ற வாழ்வு சிறக்கிறது.

இதற்கு மாறாக முற்றிலும் மாறுபட்ட சூழலில் தள்ளப்படும் குழந்தை குழப்ப நிலைக்கு உள்ளாகிறது.

கற்றலும் கற்பித்தலும் மரபு சார்ந்து அமைவதின் தேவை இங்கே தான் எழுகிறது.
|
Comments:
really superb
 
Best regards from NY!
» »
 
That's a great story. Waiting for more. volvo lkw Rx soma buy tramadol drug interaction topamax
 
பேரன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
வாழ்வாங்கு வாழ கட்டுரை பற்றிய கருத்தும் வாழ்த்தும்
வாழ்வென்பது தோன்றின் புகழோடு தோன்றுக அப்புறம் மாபெரும் சபைதனில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழ வேண்டும் என்றும் பிறப்புக்கு முன் ஏதுமில்லை எனவும் இறப்புக்கு பின்னர் ஏதுமில்லை என்றும், வாழ்வென்பது கல்லறை நோக்கிய ஒரு நெடும் பயணம் என எழுதி உள்ளீர்கள்.
வாழ்வென்பது பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட ஒரு பயணம் . இந்த பயண தேடல் எனக்கும் உள்ளது.
வாழ்வு பற்றிய தேடல்தான் புத்தரை உருவாக்கியது. பிறந்து 29 ஆண்டுகள் பின்னர்தான் 35 ஆண்டில் போதிமரத்தடியில் தேடலின் கரு மையம் கொண்டது. விளைவு ஆசையே அழிவிற்க்கு காரணம்,
கொல்லாமை மற்றும் பிற. 80 ஆண்டுகள் பின் பிறந்தது பௌத்தம்.உங்கள் தேடலும் தொடரட்டும். மீண்டும் ஒரு புத்தன் உதயமாகட்டும்! வாழ்த்துக்களுடன் அன்பன் சுரேஷ்ராஜன்

 
Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?